2024 ஜனவரி 3 இன்றைய ராசிபலன் - எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்?

Sobakruthu Margazhi 18 Rasipalan: இன்று 2024 ஜனவரி 3ம் நாள். சோபகிருது, மார்கழி 18ம் நாளான இன்று அனைத்து ராசியினருக்குமான ராசிபலன்கள்... நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 3, 2024, 06:05 AM IST
  • சோபகிருது மார்கழி 18 ராசிபலன்கள்
  • 12 ராசியினருக்குமான ராசிபலன்
  • 6 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள்
2024 ஜனவரி 3 இன்றைய ராசிபலன் - எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்? title=

அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக் கொள்வோம்.

 

மேஷம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

ரிஷபம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

மேலும் படிக்க | 10 ஆண்டுக்கு பிறகு உருவாகும் சுப ராஜயோகம், சனியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்

கடகம்
இன்று நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும்.நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.  

சிம்மம்
இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். 

கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.  தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. 

விருச்சிகம்
புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: ராஜயோகத்தால் அதிர்ஷ்டசாலி ஆகும் 7 ராசிகள்

தனுசு
இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.  குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கும்பம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.  குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பண வரவு, ராஜ வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News