சூரியன் ராசி மாற்றம்: 5 ராசிகளுக்கு அசத்தல் நேரம், தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

Sun Transit in November: சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2022, 11:03 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
சூரியன் ராசி மாற்றம்: 5 ராசிகளுக்கு அசத்தல் நேரம், தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும் title=

சூரியப் பெயர்ச்சி 2022: நவம்பர் 16, 2022 அன்று, கிரகங்களின் ராஜாவான சூரியன் விருச்சிக ராசியில் கோச்சாரம் ஆகவுள்ளார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பலன் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கும் அசுபமாகவும் இருக்கும். சூரியனின் ராசி மாற்றமும் 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும். இவர்களுக்கு சூரிய சஞ்சாரம் அதிக நற்பலன்களை அள்ளித்தரும். தொழில்-வியாபாரத்தில் பெரிய வெற்றிகள் கிடைக்கும். பண ஆதாயமும் உண்டாகும். சூரியனின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசியில் சூரியனின் பிரவேசம் மிகவும் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். தொழிலுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சுற்றுலா செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்ம ராசி: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். பணியிடத்தில் தாக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பண வரவு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | செவ்வாய், புதன் மாற்றம்: சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கோ வீழ்ச்சி, முழு ராசிபலன் இதோ 

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரும். இந்த கலாகட்டத்தில் பணத்தை சேமிப்பீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: 

சூரியன் விருச்சிக ராசியில்தான் கோச்சாரம் ஆகவுள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச தாக்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படக்கூடும். மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பண பலன்களை அள்ளித் தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அலுவலகத்திலும் குடும்பத்திலும் உங்கள் பணி பாராட்டப்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புகழ் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜனவரியில் சனிப்பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு எழுச்சி? யாருக்கு வீழ்ச்சி? நிவாரணம் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News