பொங்கல் ராசிபலன்: இந்த ராசிகளுக்கு சூரியன் அருளால் ராஜயோகம்!

Pongal 2023 Rasipalan:  பொங்கலின் போது நடக்கவுள்ள சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2023, 10:24 AM IST
  • மீன ராசிக்காரர்களின் எதிரிகள் தோல்வி அடைவார்கள்.
  • நினைத்தாலும் யாராலும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.
  • வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் அடைவார்கள்.
பொங்கல் ராசிபலன்: இந்த ராசிகளுக்கு சூரியன் அருளால் ராஜயோகம்! title=

பொங்கல் ராசிபலன்: சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் திருநாள் இன்னும் இரு நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நேரத்தில் சூரியன் பெயர்ச்சியாகி மகர ராசியில் நுழைவார். இந்த நிகழ்வு மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றது. இம்முறை சூரியன் ஜனவரி 14, சனிக்கிழமை இரவு மகர ராசிக்குள் நுழைகிறார். ஆகையால் மகர சங்கராந்தி பண்டிகை ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் சிறப்பு முக்கியத்துவம் மத நூல்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். சூரியனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பொங்கலின் போது நடக்கவுள்ள சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்
மகர சங்கராந்தியன்று நிகழும் சூரியனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். நீண்ட நாட்களாக நடக்காமல் தாமதமாகும் பணி தற்போது நடந்துமுடியும். செல்வம் தொடர்பான விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். நோய்கள் விலகும்.

ரிஷபம்
சூரியனின் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் இறுதியாகும், இதனால், திடீரென வேலைப்பளு அதிகரிக்கும், ஆனால் மகிழ்ச்சியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பலன் பெறுவீர்கள். 

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், ஆபத்தான வேலைகளை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படலாம். சில வேலைகளை விருப்பமில்லாமல் செய்ய வேண்டி வரும்.

கடகம்
சூரியன் மகர ராசியில் இருப்பதால், அதன் அம்சம் உங்கள் லக்னத்தில் இருக்கும். அதனால் உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை தொடர்பான பிரச்சனைகளும் தலைதூக்கும். குடும்பத்தில் ஒருவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உத்தியோகத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காததால் ஏமாற்றம் ஏற்படும்.

சிம்மம் 
இவர்கள் சூரியனின் ராசி மாறிய பிறகு சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் அல்லது வேலையில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியலில் தொடர்புடையவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். குடும்பத்துடன் எங்காவது செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள்.

கன்னி 
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களும் நன்மைகளைப் பெறலாம். தந்தையின் ஒத்துழைப்பு உங்களுக்கு சஞ்சீவனி போல் வேலை செய்யும். குழந்தை தொடர்பான நல்ல செய்தியும் கிடைத்து புதிய நம்பிக்கையை தரும். பொதுவாக, நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

துலாம்
சூரியனின் ராசி மாற்றத்தால் துலா ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். சிக்கியிருந்த பணம் இப்போது வந்து சேரும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்திலும் நன்மைகள் தெரியும்.

மேலும் படிக்க | கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி இணைப்பால் மகிழும் ராசிகள்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் விரும்பாவிட்டாலும் பயணம் செல்ல வேண்டி வரும். எனினும், இந்த பயணங்களால் அனுகூலமான விளைவுகள் ஏற்படும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கும் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

தனுசு

சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் கூடும். ஒருவரிடம் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். வாகனம் ஓட்டும் போது முழு கவனம் செலுத்த வேண்டும். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் நல்ல முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவீர்கள், அதில் பல நல்ல பலன்களையும் பெறுவீர்கள். 

மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு இது பணம் ஈட்டும் நேரம். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். பிள்ளையின் வெற்றியால் மனம் மகிழ்ச்சியடையும். பண விஷயத்தில் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள்.

கும்பம்
சூரியன் உங்களின் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற பொருட்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இந்த நேரத்தில் கிடைக்கும். இறக்குமதி-ஏற்றுமதியுடன் தொடர்புடையவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களின் எதிரிகள் தோல்வி அடைவார்கள். நினைத்தாலும் யாராலும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறுவார்கள். குழந்தைகள் தொடர்பான சில விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். எனினும் அவை விரைவில் சரியாகும். 

மேலும் படிக்க | ஜாதகத்தில் சந்திரன் யோகம் நீட்சமாக இருக்கிறதா? 5 விஷயத்தை செய்தால் அருள் பொழிவார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News