வட இந்தியாவில் அன்னையின் 9 நவராத்திரி ரூபங்கள்! 2ம் நாள் பிரம்மச்சரிணி தேவி

Goddess Of Navrathri: நவராத்திரி நாயகி அன்னையின் அவதாரங்கள்! இது வட இந்தியர்களின் நம்பிக்கை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 27, 2022, 02:00 PM IST
  • அன்னையின் நவராத்திரி ரூபங்கள்
  • ஷைலபுத்ரியாக தொடங்கும் முதல் நாள் அவதாரம்
  • நவராத்திரி ஒன்பதாம் நாளில் சித்திதாத்ரியாக அன்னையின் அருள் கிடைக்கும்
வட இந்தியாவில் அன்னையின் 9 நவராத்திரி ரூபங்கள்! 2ம் நாள் பிரம்மச்சரிணி தேவி title=

சென்னை: இது நவராத்திரி காலம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி பக்தி சிரத்தையுடன் கடை பிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி விழா பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சடங்குகள் சம்பிரதாயங்களுடன் அனுசரிக்கபப்டும் வழிபாடுகளில் அன்னையின் அனைத்து வடிவங்களும் வழிபடப்படுகின்றன. நவராத்திரியில் வைக்கப்படும் கலசத்தில் அன்னை அருள் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். தசமியன்று, விஜயதசமி கொண்டாட்டங்களுடன் நவராத்திரி பூஜைகள் முடிவுக்கு வருகின்றன. 

நவராத்திரி பூஜை கொண்டாடப்படும் விதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். இருப்பினும், இந்த நேரத்தில் வெவ்வேறு சடங்குகளை மேற்கொள்வதன் அடிப்படை ஒன்றே. தேவியை மகிழ்வித்து, மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ வைக்கும் அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாகும். 

நவராத்திரியின் வெவ்வேறு நாட்களில் வழிபடப்படும் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களின் விரிவான விளக்கம். இது வட இந்தியாவின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

முதல் நாள் ஷைலபுத்ரி தேவி
நவராத்திரி முதல் நாள்,  அன்னை ஷைலபுத்ரி வழிபடப்படுகிறார். மலைகளின் மகள் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் என மூவரின் சக்திகளையும் கொண்டவர் மலையரசி ஹைலபுத்ரி என்பது நம்பிக்கை.  நவராத்திரியின் முதல் நாளில் ஷைல்புத்ரி தேவிக்கு சுத்தமான நெய்யை நிவேதனம் செய்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.

பிரம்மச்சாரிணி தேவி
நவராத்திரியின் இரண்டாவது நாளில் பிரம்மச்சாரிணி தேவி வழிபடப்படுகிறார். ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மறு கையில் கமண்டலமும் ஏந்தியவாறு காணப்படும் பிரம்மச்சாரிணி தேவிக்கு சர்க்கரை நிவேதனம் செய்யப்படுகிறது. நீண்ட ஆயுளுடன் வாழ அருள்பாலிக்கிறார் அன்னை பிரம்மச்சாரிணி.

சந்திரகாண்டா தேவி
மூன்றாவது நாள் சந்திரகாண்டா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 10 கரங்களும், நெற்றியில் பிறை சந்திரனும் கொண்ட சந்திரகண்டா தேவி, புலியை வாகனமாக கொண்டவர். தீமைகளையும் அழித்து வலியைக் குறைக்கும் மா சந்திரகாண்டாவிற்கு பாயசத்தை நிவேதனம் வேண்டும்.

மேலும் படிக்க | ஏழு ராசிகளின் மாற்றம் இன்னும் சில நாட்களில்! ஏழரையால் பாதிக்காத ராசிகள் இவை

கூஷ்மாண்டா தேவி
நவராத்திரியின் நான்காவது நாள் மா குஷ்மாண்டாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தை உருவாக்கிய அன்னை என்ற பெயர் பொருளைக் கொண்ட அன்னை, தன் பக்தர்களுக்கு ஞானத்தை அருளுகிறாள். நவராத்திரியின் போது அவளை வழிபடுவது ஒருவரின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.  

ஸ்கந்தமாதா தேவி
ஐந்தாம் நாள் மா ஸ்கந்தமாதாவை வழிபடுகிறார்கள். தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் தேவி நான்கு கரங்களை உடையவள். அவள் இரண்டு கைகளில் தாமரையைப் பிடித்திருப்பாள். மடியில் கார்த்திகேயன் முருகன் அமர்ந்திருக்கும் கோலம் இது. பக்தர்கள் அம்மனுக்கு வாழைப்பழத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

காத்யாயினி தேவி
நவராத்திரியின் ஆறாம் நாளில் மா காத்யாயினி வழிபடப்படுகிறார். காத்யாய முனிவரின் மகள் மற்றும் சக்தியின் வடிவமான அன்னை காத்யாயனியின் ஒரு கையில் வாள் ஏந்தியிருப்பார். அன்னை காத்யாயினிக்கு தேன் நிவேதிக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

காலராத்திரி தேவி
நவராத்திரியின் ஏழாவது நாள் (சப்தமி) அன்னை காலராத்திரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஆகும். ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் திரிசூலமும் வைத்திருக்கும் அன்னை, கருமையான நிறத்துடன் கடுமையான தோற்றம் கொண்டவர். அன்னையில் நெற்றியில் சிவனுக்கு இருப்பதைப் போலவே நெற்றியில் மூன்றாவது கண் இருக்கும்.வலி மற்றும் தடைகளை நீக்க உதவும் காலராத்திரி அம்மனுக்கு வெல்லம் சேர்த்த பொருட்களை நிவேதனம் செய்கின்றனர்.  

மகாகௌரி தேவி
நவராத்திரியின் எட்டாவது நாள் (துர்கா அஷ்டமி) மகாகௌரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஒரு கையில் திரிசூலத்தையும் மற்றொரு கையில் உடுக்கையும் வைத்திருக்கும் மஹாகௌரி அன்னைக்கு தேங்காய் நிவேதனம் செய்வது உகந்தது.

சித்திதாத்ரி தேவி
நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் நாளில் சித்திதாத்ரியாக அன்னை வழிபடப்படுகிறார். தாமரை மலரில் அமர்ந்திருக்கும் தேவி, பரிபூரணத்தின் அடையாளமாகவும், இயற்கைக்கு மாறான நிகழ்வுகளிலிருந்து தனது பக்தர்களைப் பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது. எள் பிரசாதத்தை விரும்பி ஏற்றுக் கொள்வார் அன்னை சித்திதாத்ரி.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News