அடுத்த 20 நாட்கள்..இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, பதவி உயர்வு, பணம் கிடைக்கும்

Surya Gochar 2023: சூரியன் பெயர்ச்சியாகி மேஷ ராசியில் நுழைந்துள்ளார். அதே நேரத்தில் புதன், குரு, ராகு போன்ற கிரகங்களும் மேஷ ராசியில் உள்ளன. மே 15 வரை சூரியனின் ராசி மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2023, 03:49 PM IST
  • மிதுன ராசியினருக்கு சூரியனின் பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கும்.
  • எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
அடுத்த 20 நாட்கள்..இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, பதவி உயர்வு, பணம் கிடைக்கும் title=

சூரியன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார். இப்போது மே 15 வரை, சூரியன் மேஷ ராசியில் தான் இருப்பார். சூரியன் புதன் இணைந்து புதாதித்ய யோகம் உண்டாகும். இதுதவிர ராகு, குரு ஆகிய கிரகங்களும் மேஷ ராசியில் இருப்பதால் பஞ்சகிரக யோகம் உண்டாகும். இந்த வழியில், மே 15 வரை, கிரகங்களின் நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே சூரியன் பெயர்ச்சி காலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிவோம்.

சூரியன் பெயர்ச்சியின் தாக்கம்

மேஷம்: மேஷ ராசியில் சூரியன் இருப்பது இந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். இதனுடன் மேஷ ராசியில் சூரியனும் புதனும் இணைந்து உருவாகும் புத்தாதித்ய யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும். இவர்கள் தொழில்-வியாபாரத்தில் பெரிய பலன்களைப் பெறுவார்கள். பணவரவுகளால் பொருளாதார நிலை மேம்படும். காதல், திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | 36 ஆண்டுக்கு பிறகு குரு-ராகு சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ஜாக்கிரதை

மிதுனம்: மிதுன ராசியினருக்கு சூரியனின் பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குறிப்பாக மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பெரும் பலன்களைத் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி தொழிலில் முன்னேற்றம் தரும். எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் படித்து வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியன் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தருவார். பொருளாதார ஆதாயம் உண்டாகும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடினமான பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரம் வளரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Venus Transit: மிதுன ராசிக்கு பெயரும் சுக்கிரன்! வாழ்க்கையை வளமாக்க பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News