2025 Horoscope Rasi Palan Predictions In Tamil : இன்னும் ஒரு சில நாட்களில் 2025-ஆம் வருடம் பிறக்க இருக்கிறது. சனி மற்றும் குருவிற்கு உகந்த வருடத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு உரிய வருடத்திற்கு நகர்கிறோம். இதனால் அடுத்த வருடத்தில் பலவித மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. இதனால் பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. அதற்குரிய ராசிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷம்:
12 ராசிகளும் முதல் ராசியான மேஷத்திற்கு அடுத்த வருடம் முன்னேற்றத்திற்கு உதவும் வருடமாக இருக்கப் போகிறது. மேஷ ராசி சேர்ந்தவர்கள் அடுத்த வருடம் தங்களது தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த இருக்கின்றனர். இவர்களின் ராசியை அடுத்த வருடத்தில் ஆளும் செவ்வாய் கிரகம், இவர்களை முன்னிட்டு பாதையில் அழைத்துச் செல்ல இருக்கிறது. தொழில் ரீதியாக முக்கியமான திருப்பங்கள் சந்திக்க இருக்கும் இவர்கள், அதிகமான தன்னம்பிக்கையை பெற இருக்கின்றனர். இவர்களின் தனிப்பட்ட உறவுகளும் மேம்பட இருக்கின்றன. ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள் அதை ஒரு படி மேலே கொண்டு செல்ல திட்டமிடுவர். அதேபோல, ஒரு சிலருக்கு புதிய உறவுகளின் அறிமுகங்கள் கிடைக்க இருக்கிறது.
ரிஷபம்:
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு 2023 ஆம் வருடம், நிதி ரீதியாக அவர்களை நிலையாக வைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிதி பாதுகாப்பிலும் குரு மற்றும் செவ்வாய் கிரகங்கள் பார்த்துக்கொள்கின்றன. இதனால், ரிஷப ராசி சேர்ந்தவர்கள் தங்களுக்கு பல வருடங்கள் வருவாய் தரும் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்களின் உறவுகள் மேம்பட செவ்வாய் கிரகம் அனுகிரகிக்கும் எனக்கூறப்படுகிறது.
சிம்மம்:
2025-ல் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெறப்போகும் ராசிகளுள் ஒன்றாக உள்ளது, சிம்மம். இவர்கள் ஒரு சில முக்கியமான விஷயங்களுக்கு அடுத்த வருடத்தில் தலைமை தாங்க வாய்ப்புள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள் இதுவரை நினைத்து பார்க்க முடியாத இடத்தை எட்ட அடுத்த வருடத்தில் வழி உண்டு. சிம்மராசிக்காரர்களுக்கு, அடுத்த வருடத்தில் புதுமையான அர்த்தமுள்ள உறவுகள் கிடைக்கலாம்.
மேலும் படிக்க | சனிக்கிழமையில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..
தனுசு:
தனுசு ராசியின் மீது குருவின் பார்வை அடுத்த வருடம் இருப்பதால், இவர்கள் வாழ்வில் நடப்பவை அனைத்தும் இவர்களுக்கு சாதகமாகவே முடியும். அடுத்த வருடத்தில் இவர்களுக்கு தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படலாம். இவர்களுக்கு இந்த வருடத்தில் தன்னைத்தானே தெரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைத்ததை நன்றாக பயன்படுத்திக்கொண்டு, இனி நுழையப்போகும் உறவுகளில் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பர். ஒரு சிலருக்கு தொழில்ரீதியாக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் எதிர்பாராத வகையில் இவர்களை வந்தடையும்.
விருச்சிகம்:
2025 ஆம் வருடம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வருடமாக இருக்கும். இந்த வருடத்தில் இவர்கள் தங்களின் வாழ்க்கை குறிக்கோளை நிறைவேற்ற அதிகமான வாய்ப்புள்ளது. அடுத்த வருடத்தில் இவர்கள் இதுவரை தங்களுக்கு இருந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து, தங்களது முழு திறனையும் உணர்ந்தவராக இருப்பர். ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் பார்வை விருச்சிக ராசியின் மீது விழுவதால் அந்த மாதத்தில் இவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். இவர்களின் மன உறுதியும், தடைகளை தாண்டி எதிர்த்து வரும் திறன்களும் இவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | செவ்வாய் வக்ர பெயர்ச்சி... 2025 புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ