வெற்றி, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் நவம்பர் 4 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Sani Vakra Nivarthi: சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இதனால் அபரிமிதமான நற்பலன்களை அடைவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 28, 2023, 02:00 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தைத் தரும்.
  • தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.
  • முன்னேற்றப் பாதை மிக சிறப்பாக காணப்படுகின்றது.
வெற்றி, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் நவம்பர் 4 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் அதிகமாகவே இருக்கும். தற்போது சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சனி தற்போது வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4, 2023 முதல், சனி வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இதனால் அபரிமிதமான நற்பலன்களை அடைவார்கள். சனி இவர்களுக்கு பணம், புகழை கொடுப்பதோடு, பெரும் முன்னேற்றத்தையும் தருவார். இவர்களுக்கு வேலை, வியபாரத்தில் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனி வக்ர நிவர்த்தியால் ஜாக்பாட் நன்மகளை பெறவுள்ள ராசிகள் இவைதான்: 

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், மிகுந்த நன்மைகள் உண்டாகும். ப்ராபர்டி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இவர்கள் எடுத்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும்.

ரிஷப ராசி:

சனியின் வக்ர நிவர்த்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இவர்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். இதுவரை செய்து வந்த கடின உழைப்பு இறுதியில் சாதகமான பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். இந்த புதிய வேலை உங்களுக்கு பெரிய பதவியையும், அதிக பணத்தையும் தரலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க | சனியின் தீய பார்வை விலக... குபேர அருள் கிடைக்க.. வன்னி மரச்செடியை நடவும்!

கடக ராசி:

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தைத் தரும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். முன்னேற்றப் பாதை மிக சிறப்பாக காணப்படுகின்றது. உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். படிப்படியாக முன்னேறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்வீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கலாம், அது எதிர்காலத்தில் பலனைத் தரும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதில் இப்போது அதிக லாபம் உண்டாகும்.

கன்னி ராசி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி நல்ல நாட்களின் தொடக்கமாக இருக்கும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி பெறுவீர்கள். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ஆதாயம் உண்டாகும். உங்கள் பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு மற்றும் அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | விபரீத ராஜயோகம்: புதன் வக்ர நிலையால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் கூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News