குரு பெயர்ச்சியால் உருவான கஜலட்சுமி யோகம்: இந்த ராசிகளுக்கு பண வரவு, அனைத்திலும் வெற்றி

Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2023, 02:19 PM IST
  • மீன ராசியின் இரண்டாம் ஸ்தானத்தில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
  • இந்த சுப யோகம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும்.
  • வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு பெயர்ச்சியால் உருவான கஜலட்சுமி யோகம்: இந்த ராசிகளுக்கு பண வரவு, அனைத்திலும் வெற்றி title=

குரு பெயர்ச்சியால் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் கிரக நட்சத்திரம் மற்றும் யோகங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறன. இதனுடன் கிரக மாற்றங்களாலும் சேர்க்கைகளாலும் அவ்வப்போது பல ராஜயோகங்களும் உருவாகின்றன.  ஜோதிடத்தில் 32 ராஜயோகங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு பகவான் பெயர்ச்சியானார். குருவின் பெயர்ச்சி காரணகாக பல வகையான யோகங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது குருவின் சஞ்சாரத்தால் கஜலக்ஷ்மி யோகம் உருவாகி இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி, சனி தசை போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குரு பெயர்ச்சியால் உருவான கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். கஜலட்சுமி ராஜயோகத்தால் பல நற்பலன்களை பெறப்போகும் அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

துலாம் ராசி

ஜோதிடர்களின் கூற்றுப்படி, துலா ராசிக்கு ஏழாவது வீட்டில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகும். இதனால் தடைபட்ட வேலைகள் வேகமடைவதோடு அவை வெற்றிகரமாக நடந்துமுடியும். மேலும் மூதாதையர் சொத்துகள் மீதான உங்கள் உரிமையும் அதிகரிக்கும். இதனுடன், திருணம் ஆகாத துலா ராசிக்காரர்களுக்கு தற்போது திருமணம் நிச்சயம் ஆகும். 

இது முதலீட்டிற்கு ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். இரவும் பகலுமாக உழைத்து பன்மடங்காக முன்னேற்றம் அடையலாம்.

மேலும் படிக்க | சனி-செவ்வாய் இந்த ராசிகளை பாடாய் படுத்தும், 'ஷடாஷ்டக் யோகம்' தொல்லைகளைத் தரும்

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கும் கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் சுப பலன்கள் கிடைக்கும். ராசிக்கு பத்தாம் வீட்டில் இந்த யோகம் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும். மேலும் பண ஆதாயத்திற்கான அறிகுறிகளும் உள்ளன. விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு தற்போது கிடைக்கும்.

ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நல்ல முடிவுகளை அளிக்கும். உங்கள் ஆராய்ச்சிகளில் அபார வெற்றிகளை பெறுவீர்கள். மறுபுறம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் நல்ல பலன்கள் காத்திருக்கின்றன. 

மீன ராசி

மீன ராசியின் இரண்டாம் ஸ்தானத்தில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த சுப யோகம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பண ஆதாயத்திற்கான நல்ல வாய்ப்புகளும் உள்ளன. தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இந்த நேரத்தில், நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். மேலும் இந்த காலத்தில் நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நாள்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

குரு பகவானின் அருள் பெற சொல்ல வேண்டிய குரு ஸ்தோத்திரம்:

குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரவே சர்வ லோகானாம்
பிஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News