நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: சனியின் அருளால் கேட்டது கிடைக்கும்

Sani Vakra Nivarthi: சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2023, 06:43 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த வக்ர நிவர்த்தி நன்மை பயக்கும்.
  • இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்.
  • வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் இருக்கும்.
நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: சனியின் அருளால் கேட்டது கிடைக்கும் title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: இன்னும் சில நாட்களில் நீதியின் கடவுளான சனி பகவானின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வு நடக்கவுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இது முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறர். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவர் ராசிகளில் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்துகிறார். அவர் தற்போது வக்ர நிலையில் இருக்கிறார். நவம்பர் மாதம் அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பரில் நடக்கவுள்ள சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளுக்கு ​​2024 வரையிலான காலம் மங்களகரமானதாகக் இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி சாதகமாக இருக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த வக்ர நிவர்த்தி நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும், அவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப வெற்றி பெறுவார்கள். நிதி விஷயங்களில் உங்கள் கூட்டாளியின் கருத்தை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிகமாக தண்ணீர் குடிக்கவும். உங்கள் தாயுடன் நேரத்தை செலவிடுங்கள்.

மேலும் படிக்க | சனிக்கிழமை இரவில் இந்த பரிகாரங்களை செய்யுங்க... பணக்காரர் ஆவதை யாராலும் தடுக்கவே முடியாது!

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் அதிக பலன்களை தரும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு வலுவாக இருக்கும். பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் பல நன்மைகள் உண்டாகும். சர்ச்சைக்குரிய ஆனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மங்களகரமானதாக கருதப்படுகிறது. பொருளாதார நிலை மோசமாக உள்ளவர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். சட்ட சிக்கல்களில் சிக்கியுள்ளவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரத்தில் சில சிரமங்கள் இருக்கும், எனினும் அதை எளிதில் சமாளித்து வெற்றி அடைவீர்கள். நீங்கள் உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள், உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசும்போது, ​​​​உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது நல்லது.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி நன்மை பயக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத் துறையில் நிதி ஆதாயம் அடையலாம். காதல் வாழ்க்கையில் சில மோதல்கள் வரலாம். நிதி சிக்கல்கள் படிப்படியாக நீங்கும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மீனத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்... அமோகமான வாழ்க்கை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News