ஜூலையில் 3 முறை மாறுகிறார் புதன்: இந்த ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்

Mercury Transit in July 2022: புதன் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். புதன் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2022, 05:38 PM IST
  • புதன் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
  • கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் புதன் கிரகம் மகிழ்ச்சியை பரிசாக தரும்.
  • இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
ஜூலையில் 3 முறை மாறுகிறார் புதன்: இந்த ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட் title=

ஜூலை 2022 இல் புதன் கோச்சாரம்: ஜோதிடத்தின் படி, ஜூலை மாதத்தில் ஐந்து கிரகங்களின் ராசிகள் மாறுகின்றன. இதில் புதன் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

கிரகங்களின் அதிபதியான புதன் பேச்சு, புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகம் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் முன்னேற்றமும் வெற்றியும் பெறுகிறார். ஜூலை மாதத்தில், புதன் கிரகம் மூன்று முறை ராசியை மாற்றும்.

புதன் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். புதன் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலனையும், சில ராசிகளுக்கு அசுப பலனையும் அளிக்கும். புதன் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஜூலை 2022ல் புதன் எப்போது மாறும்:

புதன் ஜூலை 2 ஆம் தேதி காலை 09:52 மணிக்கு இந்த மாதத்தில் முதல் முறை தனது ராசியை மாற்றினார். இந்த நேரத்தில் புதன் மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். ஜூலை மாதம் இரண்டாவது ராசி மாற்றம் ஜூலை 17 அன்று நடக்கும். இது ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு நடக்கும். ஜூலை 17ல் புதன் கடக ராசிக்குள் நுழைவார். இதன்பிறகு ஜூலை 31-ம் தேதி புதன் மிண்டும் ராசி மாறுவார். இந்த நேரத்தில் புதன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிப்பார்.

இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் அருள் கிடைக்கும்:

சிம்மம்:
புதன் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்திலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும். அனுகூலமான செய்திகள் உங்களை வந்தடையும்.

மேலும் படிக்க | குரு பூர்ணிமா 2022: உருவாகிறது 4 ராஜயோகங்கள்; யாருக்கு என்ன பலன்

கன்னி:
கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் புதன் கிரகம் மகிழ்ச்சியை பரிசாக தரும். இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் வரலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். இது முதலீட்டிற்கு நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித்தரும். 

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சொத்துக்களில் லாபம் கிடைக்கும். தொழிலில் பதவி உயர்வு கூடும். பணி செய்யும் பாணி பாராட்டப்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். செய்யும் தொழிலில் விருத்தி ஏற்படும். பல புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இது முதலீட்டிற்கு நல்ல நேரமாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News