நவகிரகங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதேபோல, கிரகங்களில் விஷ்ணுவைக் குறிக்கும் கிரகம் புதன் கிரகம் ஆகும். உச்சத்தில் உள்ள புதன் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாளை குறிக்கிறது. கன்னி ராசியில் புதன் உச்சமடைந்தால், அதே கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைகிறார். புதன் விஷ்ணுவையும், சுக்கிரன் லக்ஷ்மியையும் குறிக்கும் தெய்வங்கள்.
திருப்பதியில் குடி கொண்டிருக்கும் பெருமாளின் மனைவியான லட்சுமிதேவி, பெருமாளிடம் பிணங்கிக் கொண்டு மகாராஷ்ட்ராவில் உள்ள கோலாப்பூரில் போய் குடி கொண்டுவிட்டதாக திருப்பதி தலத்தின் ஸ்தல புராணம் சொல்கிறது. இதன் பொருள் என்னவென்றால், திருப்பதியில் பெருமாளுடன், அவரது மனைவி லக்ஷ்மி இல்லை.
இதனால் தான், மனைவியே செல்வத்தின் கடவுளாக இருந்தாலும், கணக்கில் அடங்காத காணிக்கைகள் வந்து உலகில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திருப்பதி திருக்கோவில் திகழ்ந்தபோதிலும், திருமணத்திற்கு வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாமல் வெறும் வட்டியையே வெங்கடாசலபதி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனை கன்னியில் புதன் உச்சமாயும் , சுக்கிரன் நீச்சமாயும் இருப்பது இதை உறுதி செய்கிறது.
இதைத் தவிர, கன்னி என்பது உச்ச புதனின் ராசி என்பதால் தான் திருப்பதி பெருமாள், நின்ற கோலத்தில் அருள்புரிகிறார் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேபோல, லக்கினங்களில் ஆறாவதாக கன்னி இருக்கிறது. ஆறாம் பாவம் கடனைக் குறிக்கிறது என்பதால் தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் கடன் வாங்கியதாகவும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | சனி சந்திர கிரகணத்தால் மோசமாய் பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு சனி பரிகாரங்கள்!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
என்பது பலரும் கேட்டிருக்கக்கூடிய ஒரு சொலவடை. இந்த பதத்தில் பொன் என்பது செல்வத்துக்கான அதிபதியாக இருக்கும் குருவை குறிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருப்பதே வாழ்க்கைக்கு அவசியம் என்பதை குறிக்கவே இந்த க்க வேண்டும் என்பதையே சூசகமாக இப்படி குறிப்பிட்டுள்ளனர்.
வித்யாகாரகன் என்று போற்றப்படும் புதன் கிரகம் தான் அறிவு, கல்வி, கலைகள், ஞானம், வானவியல், விஞ்ஞானம், ஜோதிடம், கணிதம், நுண்கலைகள் என புத்தி சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் காரகராகிறார்.
வித்யாதேவியான சரஸ்வதிக்கு புதன்தான் அதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் புதனின் நிலை வலுவாக இருந்தால் அவர், உயர்கல்வி, ஆராய்சிக்கல்வி என புத்தியை விருத்தியாக்கும் வேலையை செய்வார். அதிலும் புதன் வலுத்து செல்வாய் சுபத்துவமாக இருக்கும் ஒரு ஜாதகர் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளைப் படிப்பார்.
மேலும் படிக்க | ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!
ஜோதிடத்தில் கல்வியை குறிக்கும் இடங்கள் 2,4,5,9 என்றாலும் தரமான கல்வி மற்றும் உயர்கல்வியை உறுதி செய்வது நான்காம் இடத்தில் புதன் இருக்கும் நிலை தான். ஒருவரின் துறை சார்ந்த கல்விக்கு அந்தந்த துறையை குறிப்பிடும் கிரகங்களுடன் புதன் அமைந்திருக்கும் இடமும் ஒரு காரணமாகும்.
பிற கிரகங்களுடன் புதனின் இணைவும், அமைந்திருக்கும் இடமும் தான் ஒருவரின் கல்வி உச்சமாவதற்கோ அல்லது நீச்சமாவதற்கோ காரணம் என்றாலும், ஒருவர் பல்துறை வித்தகராக புதன் வலுத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதேபோல, மிதுனம்,கன்னி போன்ற புதனின் வீடுகளில் பாவக்கிரகங்கள் இல்லாமலோ பார்க்காமலோ இருந்தும், அதில் புதனும் குருவும் இருந்தாலோ அல்லது இவை இரண்டுடன் சுக்கிரனின் தொடர்பும் இருந்தால், ஒருவர் அனைவராலும் பாராட்டப்படும் புத்திசாலியாக இருப்பார்.
புதனுடன் சூரியன் சேர்ந்தால், புதாதித்த யோகம் ஏற்படும். ஒருவரின் 1, 4, 8ம் இடங்களில் புதனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஒருவர் தான் சார்ந்திருக்கும் துறையில் புகழ்பெறுவார்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 17 ஆண்டுகள் வெளுத்து வாங்கும் புதன் மகா திசை காலம்! யாருக்கு நல்லது? பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ