ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க நன்மைகள், மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்

Rahu Transit: ராகு பெயர்ச்சிக்கு பிறகு பல ராசிகளின் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2023, 08:14 PM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி, ராகு இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தின் 11வது வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கப் போகிறார்.
  • இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
  • அதே நேரத்தில், இந்த சமயத்தில் பெரிய செலவுகளும் வரும்.
ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க நன்மைகள், மகிழ்ச்சி மழையில் நனைவார்கள் title=

ராகு பெயர்ச்சி 2023: 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராகு மேஷ ராசியில் நுழைகிறார். ஆனால் அதற்கு முன் ராகு அக்டோபர் வரை ரிஷப ராசியில் இருப்பார். மறுபுறம், கும்பத்தில் சனியின் பெயர்ச்சியால் ராகுவும் சனியும் ஒருவருக்கொருவர் மைய நிலையில் இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் ராகு மற்றும் சனியின் தாக்கத்தால், சுக்கிரனின் ராசி ரிஷபம் மற்றும் சனி பெயர்ச்சியாகவுள்ள கும்பம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இவர்களுடன் இன்னும் சில ராசிக்காரர்களுக்கும் ராகு நல்ல பலன்களை அளிப்பார். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்

ஜோதிட சாஸ்திரப்படி, ராகு இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தின் 11வது வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். அதே நேரத்தில், இந்த சமயத்தில் பெரிய செலவுகளும் வரும். ஆனால் பண வரவால், பண இருப்பு இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அருகாமையில் பயணம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன, இந்த பயணங்கள் நன்மை பயக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் 10ம் வீட்டில் இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த நேரத்தில், குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். மறுபுறம், குடும்ப உறுப்பினரின் உடல்நிலை மோசமடைந்து அதனால் பதட்டமான சூழல் ஏற்படலாம். ஆனால், மெதுவாக உடல்நிலை சரியாகும். இந்த நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் திடீர் பண வரவு அதை ஈடு செய்யும். 

இந்த காலகட்டத்தில் வேலையில் அதிக அழுத்தம் இருக்கும். இடையிடையே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்கள் நிதி நிலைமையை சீராக வைத்திருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படாது. இக்காலகட்டத்தில் உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி, இந்த ராசிகளின் கடினமான நேரம் அடுத்த வாரம் முதல் தொடங்கும் 

விருச்சிகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, உங்கள் ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. ராகுவின் சஞ்சாரத்தால் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். மன உறுதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அதே நேரத்தில், பொருளாதாரமும் முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இனிமையான பொழுதை செலவழிப்பீர்கள். 

கும்பம்

கும்ப ராசியின் ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். இது சுப பலன்களைத் தரும். இந்த நேரத்தில், வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பது நன்மை பயக்கும். இந்த நேரம் தொழிலுக்கும் சாதகமானது. இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாயின் வக்ர நிவர்த்தியும் புதனின் உதயமும்! எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News