ஜனவரியில் சனிப்பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு எழுச்சி? யாருக்கு வீழ்ச்சி? நிவாரணம் என்ன?

Saturn Transit in Aquarius:   சனி ராசி மாறியவுடன், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை தொடங்கும். சில ராசிகளின் மேல் இருந்த ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் நீங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2022, 11:59 AM IST
  • மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும்.
  • ஏப்ரல் 17, 2030 வரை, ஏழரை ஆண்டுகள் இந்த ராசியில் இதன் தாக்கம் தொடரும்.
  • எனினும், ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டத்தில் அதிக சிரமம் இருக்காது.
ஜனவரியில் சனிப்பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு எழுச்சி? யாருக்கு வீழ்ச்சி? நிவாரணம் என்ன? title=

கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி, ராசிகளில் அதன் பலன்கள்: நீதியின் கடவுளான சனி பகவான், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் எழுச்சியையும் சில ராசிக்காரர்களின் வாழ்வில் படு வீழ்ச்சியையும் ஏற்படுத்தவுள்ளார். ஜனவரி 17, 2023 அன்று, சனி பகவான் மகரத்தை விட்டு வெளியேறி கும்பத்தில் நுழைகிறார். சனி ராசி மாறியவுடன், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை தொடங்கும். சில ராசிகளின் மேல் இருந்த ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் நீங்கும். சனியின் இந்த ராசி மாற்றம் காரணமாக, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அனைவரது வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலனை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

சனிப் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலனைத் தரும்

மிதுனம்: 

ஜோதிட சாஸ்திரப்படி 2023 ஜனவரி 17-ம் தேதி சனிப்பெயர்ச்சி ஆனவுடன் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும். இதனால் இவர்களுக்கு இத்தனை நாட்களக முடங்கி இருந்த பல பணிகள் நடந்து முடியும். சனியால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.

துலாம்: 

ஜனவரி 17, 2023 முதல் துலாம் ராசிக்காரர்களும் சனி தசையிலிருந்து விடுதலை பெறுவார்கள். இவர்களுக்கு தீராத நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிகப்படியான முன்னேற்றம் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 6 ராசிக்காரர்களுக்கு தனலாபத்தைக் கொடுக்கும் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி 

தனுசு: 

2023 ஜனவரி 17 ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கும் போதே தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தனுசு ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் நடந்து வருகிறது. சனி ராசியை விட்டு வெளியேறும் போது அதிகப்படியான நன்மைகளை அள்ளித் தருவார். 

கும்பம்: 

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் இந்த ராசியில் சனியின் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். இது மிகவும் வேதனை மிகுந்ததாக இருக்கும். உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் இருக்கலாம். பண இழப்பு ஏற்படலாம்.

மீனம்: 

மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். ஏப்ரல் 17, 2030 வரை, ஏழரை ஆண்டுகள் இந்த ராசியில் இதன் தாக்கம் தொடரும். எனினும், ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டத்தில் அதிக சிரமம் இருக்காது. எப்போதும் சனி பகவானை பிரார்த்திப்பது நல்லது.

மகரம்: 

ஜோதிடக் கணக்கின்படி, 2023 முதல் மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். இந்த ராசியில் மார்ச் 29, 2025 வரை ஏழரை நாட்டு சனி தொடரும்.

ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசைக்கான நிவாரணம் 

ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தீய விளைவுகளைத் தவிர்க்க, சனி பகவானை மகிழ்விக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா போன்ற தோத்திரங்களை பாராயணம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது, விலங்குகளுக்கு உணவளிப்பது, சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலில் விளக்கெற்றி வழிபடுவது போன்றவற்றால் நிவாரணம் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |குரு வக்ர நிவர்த்தி: நவம்பர் 24 முதல் இந்த ராசிகளுக்கு சுப யோகம், வெற்றிகள் குவியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News