பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை

Pongal 2023 Rasipalan: பொங்கலில் நிகழும் சூரியனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் என்ன பலன் இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி கிட்டும்? யார் ஏமாற்றம் அடைவார்கள்? இந்த  பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2023, 03:23 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம்.
  • அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • ஆனால் வெற்றியைப் பற்றிய கர்வம் கூடாது.
பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை title=

தைத்திருநாள் பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னர், இன்று இரவு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். உதயகாலத்தின்படி, இந்த நிகழ்வு நாளை மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படும். சூரியன் மகர ராசிக்குள் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இது சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். 

மகர சங்கராந்தியில் உருவாகும் மூன்று யோகங்கள் 

2023 ஆம் ஆண்டில், மகர சங்கராந்தி அன்று சித்ரா நட்சத்திரத்தின் சிறப்பு சேர்க்கை உருவாகிறது. இது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனுடன் சூரியன், சனி, சுக்கிரனின் ஆகிய கிரகங்ககின் திரிகிரஹி யோகம் உருவாகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டும் மகர சங்கராந்தி தேதி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அந்த தினத்தில் புனித நிராடுவது, தானம் செய்வது, இறைவனை வழிபடுவது ஆகியவை நன்மை பயக்கும். பொங்கலில் நிகழும் சூரியனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் என்ன பலன் இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி கிட்டும்? யார் ஏமாற்றம் அடைவார்கள்? இந்த  பதிவில் காணலாம். 

மேஷம்: 

கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தர்மம் அதிகம் செய்தால் கிரக தோஷம் குறையும்.

ரிஷபம்: 

வாழ்க்கையில் இருந்துவந்த ஒருவித பயம் நீங்கும். அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் செய்வது நல்லது. அனுமன் உங்களை அனைத்து விதமான அச்சங்களிலுருந்தும் காப்பார். 

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு அறிவு பெருகும் நேரம். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு உருவாகும். போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். 

கடகம்: 

தனிப்பட்ட உறவுகள் மோசமடைவதற்கான அறிகுறிகள் உள்ளன. மன அழுத்தமும் அதிகரிக்கலாம். வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தினமும் குறைந்தது 108 முறையாவது நரசிம்மரை ஜபிப்பது நல்லது.

மேலும் படிக்க | வாழ்வில் மங்களம் பொங்க... ராசிக்கு ஏற்ற தானங்களை பொங்கல் தினத்தில் செய்யுங்கள்! 

சிம்மம்: 

நேரம் நன்றாக உள்ளது. பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பசுவிற்கு தினமும் பசுந்தீவனம் கொடுத்தால் பலன் கிடைக்கும்.

கன்னி: 

வாழ்வில் மனநிறைவு அதிகரிக்கும். தேவையற்ற பேரிடரில் இருந்து காப்பாற்றபடுவீர்கள். பரஸ்பர நல்லிணக்கம் அதிகரிக்கும்.

துலாம்: 

மகிழ்ச்சியாக இருங்கள். புத்தாண்டில், மகர சங்கராந்தியின் சூரியன் உங்களுக்கு பண ஆதாயங்களைத் தருவார்.

விருச்சிகம்: 

எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் அதிக கவனம் தேவை. இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. விலங்குகளுக்கு உணவு அளிக்கவும். 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம். அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால் வெற்றியைப் பற்றிய கர்வம் கூடாது.

மகரம்: 

உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது. விரும்பிய சாதனையை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு பணம் குவியும் நேரம் இது. அன்னை லட்சுமியின் அருள் உங்கள் மீது பொழியும். 

மீனம்: 

இப்போது சற்று நேரம் சரியில்லை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அனுமனை வேண்டினால் பலன் கிடைக்கும். அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Pongal 2023: பொங்கல் முதல் குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News