மகா சிவராத்திரி 2024... வாழ்க்கையில் ஐஸ்வர்யங்கள் உண்டாக... ராசிக்கு ஏற்ற ருத்ராட்ச வகை

Mahashivratri 2024: பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் சிவபெருமானை வணங்கி அவனது அருளை பெற, மகா சிவராத்திரி மிக உகந்த நாளாகும். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகாசிவராத்திரிக்கு பல்வேறு சிறப்புகளும் முக்கியத்துவமும் உண்டு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 7, 2024, 04:22 PM IST
மகா சிவராத்திரி 2024... வாழ்க்கையில் ஐஸ்வர்யங்கள் உண்டாக... ராசிக்கு ஏற்ற ருத்ராட்ச வகை title=

பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் சிவபெருமானை வணங்கி அவனது அருளை பெற, மகா சிவராத்திரி மிக உகந்த நாளாகும். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகாசிவராத்திரிக்கு பல்வேறு சிறப்புகளும் முக்கியத்துவமும் உண்டு. பகவான் விஷ்ணு, சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து சக்ரா யுதத்தைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. சக்ராயுதம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று நாம் அனைவரும் அறிந்ததே.. அதேபோல், ஆக்கும் கடவுளான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சிவபெருமானின் அடி முடியை தேடி சென்றபோது, அவர்களுக்கு நெருப்பு பிழம்பாய் விஸ்வரூப தரிசனம் கொடுத்ததும் மகா சிவராத்திரி அன்றுதான் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற மகா சிவராத்திரி நன்னாளில், விரதம் இருப்பதால் கோடி நன்மைகளை பெறலாம்.

மகா சிவராத்திரி நன்னாளில் விரதம் இருப்பதன் மூலம், எம பயம் நீங்கி, தீராத நோயிலிருந்தும் விடுபடலாம். விரதம் இருப்பவர்கள் முடிந்தவரை, மூன்று வேளையும் உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. எனினும் உடல் நலப் பிரச்சனை இருப்பவர்கள், பட்டினி இருக்க முடியாதவர்கள், பால் பழம், சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் படைத்த பொருட்களை உண்ணலாம். சிவராத்திரி தினம் முழுவதும் நமச்சிவாய என்று மந்திரத்தை ஜெபித்தாலே, நல்லது நடக்கும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் வழிமாட்டில் கலந்து கொள்வதன் மூலம், நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறி மனதிற்கு நிம்மதி பிறக்கும்.

ராசிக்கு ஏற்ற ருத்ராட்ச வகைகள்

சிவ பக்தர்கள், சிவனடியார்கள் மிகவும் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச்சின்னம் ருத்ராட்சம். ருத்ரம் என்பது சிவபெருமானையும், அச்சம் என்பது கண்களையும் குறிக்கும் சொல். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுக்களே ருத்ராட்சம் என அழைக்கப்படுகிறது. ருத்ராட்சத்தின் மேன்மை பற்றி புராணங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ராசிக்கு ஏற்ற வகையில் எந்த வித ருத்ராட்சத்தை அணிவதால் சிறந்த பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். இந்நிலையில் மேஷ ராசியினர், மகா சிவராத்திரி அன்று மூன்று முக ருத்ராட்சம் அணிவது சிறப்பு.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். இவர்கள் ஆறுமுக ருத்ராட்சம் அணிவதால், வாழ்க்கையில் அனைத்து விதமான அதிர்ஷ்டங்களையும் அடைந்து, நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினர் மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு முக ருத்ராட்சம் அணிவது அனைத்து வேலைகளிலும் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். ஜாதகத்தில் புதன் நிலை வலுவாகும்.

மேலும் படிக்க | மங்கள மகா சிவராத்திரி நாளை.. இந்த ராசிகளுக்கு சனியால் கோடீஸ்வர யோகம்

கடகம்

கடக ராசியினருக்கு சந்திரன் அதிபதி. எனவே இவர்கள் இரண்டு முக ருத்ராட்சம் அணிவதால், சந்திரனின் நிலை வலுப்பெற்று அதிர்ஷ்டம் அபரிமிதமாக கிடைக்கும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். எனவே இந்த ராசியினர் 12 முக ருத்ராட்சம் அணிவது, ஜாதகத்தில் சூரியனின் நிலையில் வலுப்படுத்தி மன உறுதியையும், வெற்றியையும் கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு அதிபதி புதன் பகவான். எனவே இவர்கள் மகா சிவராத்திரி அன்று நான்கு முக ருத்ராட்சம் அணிவது நன்மையை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அதிபதி. எனவே மகா சிவராத்திரி அன்று ஆறுமுக ருத்ராட்சம் அணிவது, வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கி, மன அமைதி ஏற்பட வழி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். எனவே மகா சிவராத்திரி அன்று, விருச்சிக ராசியினர் மூன்று முக ருத்ராட்சம் அணிவதால், செவ்வாயின் நிலை வலுவடைந்து, நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். எனவே மகா சிவராத்திரி அன்று பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது, ஜாதகத்தில் குருவை வலுப்படுத்தி, வாழ்க்கையில் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்கு அதிபதி சனிபகவான். எனவே இவர்கள் ஏழு முக ருத்ராட்சம் அணிவதால் சனீஸ்வர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கையில் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும்.

கும்பம்

கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான். எனவே இவர்களும் ஏழு முக ருத்ராட்சம் அணிவதால், ஜாதகத்தில் சனி பகவானின் நிலை வலுவடைந்து அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

மீனம்

மீன ராசிக்கு அதிபதி குரு பகவான். மகா சிவராத்திரி நன்னாளில், பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிவதால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்.

மேலும் படிக்க | மங்களம் தரும் மகா சிவராத்திரி.. இந்த ராசிகளுக்கு பண வரவு, கோடீஸ்வர யோகம்

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News