2 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு மூச்சுமுட்ட செல்வ அலை பொங்கும்

Sevvai Peyarchi Palangal: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் இரண்டு நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2024, 04:59 PM IST
  • இரண்டு நாட்களில் செவ்வாய் ஆட்டம் தொடக்கம்.
  • அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கப் போகும் ராசிகள் எவை?
2 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு மூச்சுமுட்ட செல்வ அலை பொங்கும் title=

Sevvai Peyarchi in 2 Days: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்களுக்கு பயணிப்பார், அதனுடன் செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி. அந்த வகையில் இந்த செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வருகிற ஜூலை 12 ஆம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் செவ்வாய் தனது நண்பர் சுக்கிரனின் ராசியில் (ரிஷப ராசி) பெயர்ச்சி அடையப் போகிறார். ரிஷப ராசிக்குள் செவ்வாய் நுழைவது அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டத்துடன், வெற்றியையும் தருவார். எனவே செவ்வாய் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

மேஷ ராசி (Aries Zodiac Sign): செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் செவ்வாய் உங்கள் ராசியின் அதிபதி ஆவார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும். எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறலாம். தொழில் செய்யும் இந்த ராசியினருக்கு தங்கள் திறமையைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை தொழிலில் ஈட்டலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களின் இல்லற வாழக்கை சுகமாக இருக்கும். கடன் கொடுத்து இருந்து இப்போது அதை திரும்பப் பெறலாம். மேலும், தகவல்தொடர்பில் வேலை புரியும் மேஷ ராசியினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலையில் மும்பை விட முன்னேற்றம் அடையும். துணிச்சல் போன்றவை அதிகரிக்கும். பேச்சால் முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.

மேலும் படிக்க | ஜூலை 16 முதல் ஒரு மாதத்திற்கு சூரிய பெயர்ச்சியால் துக்கமா சுகமா? உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது?

கடக ராசி (Cancer Zodiac Sign): செவ்வாய் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வசதிகளும் செல்வமும் பெருகும். ஏனெனில் உங்கள் பெயர்ச்சி வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் நடக்கப் போவதால் செல்வ மழை கொட்டும். சொத்து வாங்கலாம். இதானல் ஆதாயம் உண்டாகலாம். மேலும், வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை இந்த நேரத்தில் விரிவுபடுத்த முடியும். இதனால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். முதலீடு செய்வதன் மூலம் லாபத்தை பெறலாம். செல்வ வளம் உருவாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும், மேலும் பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign): செவ்வாய் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் விருச்சிக ராசியின் ஏழாவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மறுபுறம், வேலை மாற்றமடையலாம், இதனால் சுப வெற்றி கிடைக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இல்லற வாழக்கை சுகபோகங்களை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Cancer Zodiac Sign: கடக ராசியின் வெளிவராத ரகசியம்.. விட்டுக்கொடுக்கும் குணமுடன் இருப்பார்களாம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News