மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம்

Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2024, 05:39 PM IST
  • ஜூலை மாதம் துலா ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
  • எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பான வாய்ப்புகள் இப்போது கிடைக்கும்.
  • நீங்கள் வெற்றிப் பாதையில் செல்வீர்கள்.
மாத ராசிபலன்: ஜூலை மாதம் இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை, வெற்றி நிச்சயம் title=

Lucky Zodiac Signs of July 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சி ஆகவுள்ளன. ஜூலை மாதம் தொடங்கும் முன்பே புதனும் சுக்கிரனும் உதயமாகும். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை, பல ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி விஷயங்களில் தீங்கு விளைவித்துக்கொண்டு இருந்தது. இனி இந்த பாதகமான சூழல் சரியாகும். ஜூலை மாதம், சுக்கிரன் பெயர்ச்சியாகி சந்திரனின் ராசியான கடகத்தில் நுழைகிறார். அதேபோல் கிரகங்களின் அரசனான சூரியனும் கடக ராசிக்குள் நுழைவார். செவ்வாய் மற்றும் குருவின் நிலையும் சிறப்பாக இருக்கும். 

ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதனால் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும், மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

Monthly Horoscope: ஜூலை மாத அதிர்ஷ்ட ராசிகள்

ரிஷபம் (Taurus):

ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பல நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். பெரிய வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம் (Cancer):

ஜூலை மாதம் கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர்வாக சிந்திப்பீர்கள், உங்கள் கனவுகளை நனவாக்க முயற்சி செய்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். தொழிலுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி (Virgo):

அனைத்துத் துறைகளிலும் உங்களுக்கு லாபமும் வெற்றியும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும். கடினமான காரியங்கள் கூட எளிதில் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அதிக பண வரவு இருக்கும். சேமிப்பிலும் வெற்றி பெறுவீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் பெறலாம்.

மேலும் படிக்க | ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி... கொட்டிக்கொடுப்பார் செவ்வாய்

துலாம் (Libra):

ஜூலை மாதம் துலா ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பான வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். நீங்கள் வெற்றிப் பாதையில் செல்வீர்கள். உங்கள் பணித் துறையில் நிபுணராக மேம்படுவீர்கள். பண வரவு அதிகமாவதால் வங்கி இருப்பு அதிகரிக்கும். இந்த காலகட்டம் உங்கள் தொழிலில் சில பெரிய சாதனைகளை செய்ய பல வாய்ப்புகளை அளிக்கலாம். 

மகரம் (Capricorn):

வாழ்வில் வசதிகள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியின் வேகம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மாத வருமானம் அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிர புத ஆதித்ய யோகத்தால் லட்சுமி நாராயணரின் அருள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News