சுக்கிரன் பெயர்ச்சி: 18 ஜூன் முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், செல்வம் பெருகும்

Venus Transit:  கிரகங்களின் இயக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ராசிக்கு எந்த விதமான தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2022, 12:12 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் தங்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்.
  • போட்டிக்கு தயாராகும் தனுசு ராசிக்கார்ரகள் நன்மை அடைவார்கள்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் நல்லவர்களை சந்திப்பார்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி: 18 ஜூன் முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், செல்வம் பெருகும் title=

சுக்கிரன் ராசி பரிவர்த்தனை 2022: ஜூன் 18 முதல், சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். இப்போது சுக்கிரன் மேஷத்தில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ரிஷபத்திற்குச் செல்கிறார். மேஷத்தின் அதிபதியான செவ்வாய் அவரது எதிரி கிரகமாக கருதப்படுகிறார். 

சுக்கிரன் தனது வீட்டை அடையும் போது, ​​​​புதன் அவரை வரவேற்பார். சுக்கிரனின் வருகையால் ரிஷப ராசியில் சுபகாரியங்கள் அதிகரிக்கும். புதன் இங்கு ஜூலை 13, 2022 வரை இருப்பார். கிரகங்களின் இந்த இயக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ராசிக்கு எந்த விதமான தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் தங்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். யாரிடமும் கடுமையான வார்த்தைகள் பேச வேண்டாம். இவர்கள் தங்கள் வார்த்தைகளால் விரோதத்தை உருவாக்கிக்கொள்ளக் கூடும். இந்த காலத்தில் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் தங்கள் அழகில் கவனம் செலுத்துவார்கள். அழகுசாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆளுமை வளர்ச்சி வேகமாக நடக்கும். உங்கள் நட்பு வட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நல்ல நண்பர்களிடம் மட்டும் பழகுங்கள். 

மிதுனம் - வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் இப்போதே சுறுசுறுப்பாக செயல்படவும். நீங்கள் பணத்தை செலவழித்து  வெளிநாட்டு பயணத்தை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், இது அதற்கு உகந்த நேரம். ஆன்மீக பயணங்களும் இந்த காலத்தில் கைகூடும். 

கடகம் - உங்கள் வருமானம் அதிகரிக்கும். மூத்த சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்களுடன் எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தாலோ, அல்லது சக பெண் ஊழியர்களுடனோ கோவத்தை காட்டாதீர்கள். சண்டை வேண்டாம். இது அனைத்து இடங்களிலும் கவனமாக இருக்க வேண்டிய நேரமாகும். 

மேலும் படிக்க | கிரகங்களினால் ஏற்படும் பிரச்சனை: கடன் தொல்லையில் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள் 

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் சோம்பேறித்தனம் அதிகரிக்கும். வேலையைத் திட்டமிட்டு புதிய முறைகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் தொழில்நுட்ப ஆர்வலராக இருப்பீர்கள். அதாவது வரவிருக்கும் புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் கற்றுக் கொள்ளவும் பயன்படுத்தவும் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு இந்த காலத்தில் அதிக வெற்றிகள் கிடைக்கும். 

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில்அதிர்ஷ்டம் வேலை செய்யும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். பதவி உயர்வும் இந்த காலகட்டத்தில் ஏற்படும். பெண் மேலதிகாரி, தாய் மூலம் முன்னேற்றம் உண்டாகும். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுடன் எந்த தகராறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம் - எந்த விஷயத்தையும் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டால் பலன் இருக்காது. இந்த காலம் எதிர்கால திட்டமிடலுக்கு ஏற்ற காலமாக் இருக்கும். எதிர்காலத்திற்காக முதலீடும் செய்யலாம். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் நல்லவர்களை சந்திப்பார்கள். பழைய நண்பர்களையும் சந்திக்க நேரிடும். புதிய கூட்டாண்மைகளும் உருவாகலாம். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தனுசு - போட்டிக்கு தயாராகும் தனுசு ராசிக்கார்ரகள் நன்மை அடைவார்கள். வங்கி, சி.ஏ., வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை தேடுபவர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றத்தையும் ஏற்க வேண்டும்.

மகரம் - இந்த ராசிக்காரர்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வார்கள். உங்கள் மனதில் எந்த நல்ல எண்ணங்கள் தோன்றினாலும், அவற்றை உங்கள் நாட்குறிப்பில் பதிவு செய்யுங்கள். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம் - வீட்டின் அழகு, அலங்காரத்தில் கவனம் செலுத்துங்கள். ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால், அதை செய்து முடிக்க இது ஏற்ற நேரமாகும். எலக்ட்ரானிக் பொருட்களையும் வாங்கலாம். உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் அல்லது தொழிலதிபர்களுக்கு இது ஒரு நல்ல நேரம்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் சாதகமாக இருக்கும். திறமை அதிகரிக்கும். உங்கள் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொணரும் வாய்ப்பு கிடைக்கும். கம்ப்யூட்டர், பேங்கிங், ஃபேஷன் டிசைனிங் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினால் நல்ல பலன்கள் வரும். வாழ்க்கைத் துணையைப் பற்றிய விஷயங்களும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சனியின் இயக்கத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய மாற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News