ஆடி மாத சிவராத்திரி 2022: பல வருடங்களுக்குப் பிறகு, ஆடி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று மங்கள-கௌரி விரதமும் வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஆடி மாத சிவராத்திரியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம். சிவனுக்கு காவடி எடுத்து சென்றும், பலவிதமான பூஜைகளை செய்தும் முக்கண்ணனை வழிபடும் மாதம் இது. இந்த மாதத்தில் இறைவழிபாட்டைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பதால்தான் ஆடி மாதத்தில் சுப காரியங்களை யாரும் செய்வதில்லை. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், திங்கட்கிழமைகள், பிரதோஷம் ஆகியவை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை.
ஒவ்வொரு மாதமும் சதுர்த்தசி அன்று சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில், சிவராத்திரி 26 ஜூலை 2022 செவ்வாய்கிழமை அன்று வருகிறது.
மேலும் படிக்க | கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு!
இந்த நாளில் மிகவும் மங்களகரமான தற்செயல் நிகழ்வாக மங்கள கெளரி விரதமும் வருவது சிறப்பானது. இன்று ஐயன் சிவனுடன், சிவ பத்தினி பார்வதியை வழிபடும் நன்னாள் ஆகுக்ம்.
மங்கள கௌரி விரதம் ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது. மங்கள-கௌரி விரதம் இருப்பது சிவபெருமானையும் அன்னை பார்வதியையும் மகிழ்விக்க ஒரு நல்ல வழி. திருமணமான பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். ஜூலை 26-ம் தேதி செவ்வாய்கிழமையன்று சிவராத்திரியும், மங்கள கௌரி விரதமும் ஒன்றாக வருவது பல ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது.
இன்று பூஜை செய்ய நல்ல நேரம்
சாவான் மாத சிவராத்திரி ஜூலை 26 ஆம் தேதி மாலை 06:45 மணிக்கு தொடங்கி ஜூலை 27 ஆம் தேதி இரவு 09:10 மணி வரை தொடரும். இதன்படி ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யலாம்.
மேலும் படிக்க | சனீஸ்வரரின் கடைக்கண் சிரிப்பால் முகம் மலரும் மூன்று முத்தான ராசிகள்
சிவராத்திரி நாளில் நான்கு பிரஹங்களையும் வழிபட்டால் புருஷார்த்தம், தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று சிவராத்திரி வழிபாட்டிற்கு சிறந்த நேரம் மாலை 06:30 முதல் 07:30 வரை இருக்கும்.
பிறப்பறுக்கும் பெம்மானை ஆடி மாதத்தில் வணங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவோம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ