2022ம் ஆண்டின் கடைசி ஆடி வெள்ளி கொண்டாட்டம்: சக்தியை வழிபட்டு முக்தி பெறுங்கள்

Last Aadi Velli of 2022: சக்தி தேவியை மகிமைப்படுத்தும் ஆடி மாத வெள்ளிக்கிழமை. இன்று கடைசி ஆடி வெள்ளி கொண்டாட்டம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2022, 03:43 PM IST
  • ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை
  • கடக ராசிக்கு மாறிய சூரியனின் இருப்பு
  • பருவமழை பெய்யும் ஆடி மாத வெள்ளி இன்று
2022ம் ஆண்டின் கடைசி ஆடி வெள்ளி கொண்டாட்டம்: சக்தியை வழிபட்டு முக்தி பெறுங்கள் title=

ஆடி வெள்ளி மகிமை: 2022ஆம் ஆண்டு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அம்பாளை ஆராதித்து நிம்மதியையும் வளமான வாழ்வையும் பெறுங்கள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால், குடும்பத்தில் நிம்மதி நீடித்து நிலைபெறு . மாதங்களிலே நான் மார்கழி என்பது கிருஷ்ணனின் விருப்பம் என்றால், ஆடி மாதம் அம்பிகைக்கு உரியது. இந்த மாதத்தில் உலகெங்கும் சக்திதேவியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும். ஆடி மாதம் முழுவதுமே அம்பிகையைக் கொண்டாடலாம் என்றாலும், ஆடி வெள்ளி மிகவும் சிறந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் அன்னையை வழிபடுவார்கள். இந்த ஆண்டு இன்று தான் கடைசி ஆடி வெள்ளி. இந்த நாள் போனால், இதுபோல மற்றொரு நாள் வரவே வராது. 

ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட்டால், கணவரின் ஆயுள் பெருகும். குடுமபத்தில் மங்கல காரியங்கள் தங்கு தடையில்லாமல் நடைபெறும். ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட்டால், ஏழ்மையை அகற்றி, சகல செளபாக்கியங்களையும் அருளி, ஆரோக்கியம் மேம்படச் செய்து இனிதான வாழ்க்கையை அமைத்துத் தருவாள் மகாசக்தி.

 மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

அதனால்தான் வீட்டிலும் ஆலயத்திலும் இன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெற்று இனிதான வாழ்க்கையை அமைத்துத் தரும் மகாசக்தியை ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் கொண்டாடினால், உங்கள் வாழ்க்கையில் என்றுமே கொண்டாட்டம் தான்.

இந்த ஆடி மாதத்தில் இதுவரை வந்த வெள்ளிக்கிழமைகளில், நீங்கள் அம்பாள் வழிபாடு செய்திருந்தாலும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அவசியம் பூஜை செய்யுங்கள். அம்பாளுக்கு உகந்த செந்நிற மலர்களை சார்த்தி அன்னையின் அருளைப் பெறுங்கள்.

மேலும் படிக்க | சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகும் ராசி

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஐந்துமுகம் கொண்ட விளக்கு ஏற்றி வைத்து, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது வீட்டில் அன்னையை தங்க வைக்கும், செல்வத்தை தக்க வைக்கும். 

இனிப்புப் பொருட்களை அன்னைக்கு படைத்து பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகித்தால், அதில் யாராவது ஒருவரின் ரூபத்தில் அன்னைக்கு அது சென்று சேரும் என்பது நம்பிக்கை.

ஆடியில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா என விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். 2020ஆம் ஆண்டு கொரோனா தொடங்கியது முதல் முடங்கிப் போயிருந்த ஆடி வெள்ளி கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு களை கட்டி உள்ளன. ஆடிப்பட்டம் தேடி விதை என்பது முன்னோர் வாக்கு என்றால் ஆடி வெள்ளியில் அன்னையை வணங்கி வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள் என்பது உங்கள் வாழ்க்கைக்கு வளம் தேடித் தரும்.

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி ஆகஸ்ட் 2022: சிம்மராசியில் சூரியன் மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News