பரணியில் செவ்வாய் பெயர்ச்சி... இனி இந்த ராசிகள் தொட்டதெல்லாம் பொன் தான்...!

Sevvai Peyarchi Palangal: ஆனி மாதத்தில், தைரியம் மன உறுதி ஆகியவற்றின் காரணி கிரகமான செவ்வாய், பரணி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதனால்  எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2024, 04:13 PM IST
  • தைரியம் மன உறுதி ஆகியவற்றின் காரணி கிரகமான செவ்வாய், பரணி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார்.
  • உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள்.
  • செவ்வாய் நட்சத்திரம் மாறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது?
பரணியில் செவ்வாய் பெயர்ச்சி... இனி இந்த ராசிகள் தொட்டதெல்லாம் பொன் தான்...! title=

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் ராசி மற்றும் விண்மீன் மாற்றங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனி மாதத்தில், ஜூன் 19 புதன்கிழமை, தைரியம் மன உறுதி ஆகியவற்றின் காரணி கிரகமான செவ்வாய், பரணி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன், பொருள் வசதிகளுக்கு அதிபதி. அப்படிப்பட்ட நிலையில் செவ்வாயின் ராசி மாறுதலால் சுக்கிரனும் பலன் தருவார். செவ்வாய் பரணியில் நுழைவதால், மேஷம், துலாம் உள்ளிட்ட பல ராசிக்காரர்கள் மகிழ்ச்சியும் செல்வமும் அடைவதோடு, முடிவெடுக்கும் திறனையும் பெறுவார்கள். செவ்வாய்  நட்சத்திரம் மாறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் நுழைவதால், மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய நபர்களுடன் உங்கள் அறிமுகம் அதிகரிக்கும். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் கனவு நனவாகும் வாய்ப்பு உள்ளது. உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், இந்தக் காலத்தில் அது தீர்ந்து, குடும்ப உறுப்பினர்களிடையேயும் பரஸ்பர அன்பு இருக்கும்.

ரிஷப ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் பல விஷயங்களில் ஆதாயம் அடைவார்கள். இந்த காலகட்டத்தில், புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் பெறலாம். கைக்கும் வராமல் இருக்கும் பணம் மீட்கப்படும். இந்த காலகட்டத்தில், பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் இருக்கும். மேலும் பரஸ்பரம் புரிந்துகொண்டு செயல்படுவார்கள்.

துலாம் ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் மாற்றத்தால், துலாம் ராசிக்காரர்களின் பல பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கை முறையும் மேம்படும். பணத்தை மிச்சப்படுத்துவதுடன் சொத்து வாங்கவும் முடியும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும், அரசின் திட்டங்களின் பலன்களும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் பணிபுரியும் துறையில் வெற்றியைப் பெறுவீர்கள். சமூக, சமயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்

விருச்சிக ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் நுழைவதால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளன. மேலும் பொருளாதார நிலையும் வலுவடையும். வேலையை மாற்றத் திட்டமிடும் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவுகள் வலுவடையும். குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். நீங்கள்  பிரச்சனை ஏதேனும் சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். இந்த காலகட்டத்தில் திருமணமானவர்களின் விருப்பம் ஆசை நிறைவு பெறும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News