மீனம் ராசிக்கு குருப்பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்

Jupiter in Pisces: ஏப்ரல் 2022 இல், குரு பகவான் தனது சொந்த ராசியான மீனத்திற்குள் பெயர்ச்சியானார். தற்போது குரு பகவான் 22 ஏப்ரல் 2023 வரை மீன ராசியில் இருப்பார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2022, 12:43 PM IST
  • சுப கிரகம் என்ற அந்தஸ்தையும் குரு கிரகம் பெற்றுள்ளது
  • மீன ராசியில் 13 ஏப்ரல் 2022 அன்று பெயர்ச்சியானது
  • எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக லாபம்
மீனம் ராசிக்கு குருப்பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும் title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகவும் முக்கியமானது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் தனது ராசியை மாற்றி மீன ராசியில் ஆட்சி பெற்றார். இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு தீமை பலன்களை தரும்.

பொதுவாக குரு பகவான் அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், தொண்டு, நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். ஒன்பது கிரகங்களில் மிகவும் சுப கிரகம் என்ற அந்தஸ்தையும் குரு கிரகம் பெற்றுள்ளது. யாருடைய ஜாதகத்தில் இந்த கிரகத்தின் நிலை வலுவாக இருக்கிறதோ, அந்த நபர் பணக்காரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | ஜூன் மாதம் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன 

இந்த நிலையில் இந்த கிரகம் தனது ராசியை மாற்ற சுமார் 1 வருடம் ஆகும். அதன்படி வியாழன் தனது சொந்த ராசியான மீன ராசியில் 13 ஏப்ரல் 2022 அன்று பெயர்ச்சியானது. தற்போது 22 ஏப்ரல் 2023 வரை குரு பகவான் இந்த ராசியில் தான் அமர்ந்திருக்கும். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Guru Peyarchi News in Tamil, Latest Guru Peyarchi news, photos, videos | Zee  News Tamil

கன்னி:
இந்த காலகட்டத்தில் பழைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். 
பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும்.
தெரியாத மூலங்களிலிருந்து பணம் வரக்கூடும்.
இந்த நேரத்தில் பயணங்கள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கும்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

துலாம்:
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் குழந்தைகளுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தனியார் அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
சம்பளம் உயரும் வாய்ப்பு உண்டாகும்.
உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பெறுவீர்கள்.
சொந்த தொழில் செய்யும் வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்:
செல்வம், சொத்துக்கள் கிடைக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் எண்ணற்ற முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
உத்தியோகத்தில் கௌரவத்தைப் பெறலாம்.
வெளிநாட்டில் வேலை கிடைக்கும் ஆசை நிறைவேறும்.

கும்பம்:
நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிக்கிய பணம் எங்கிருந்தாவது பெறலாம்.
தொழிலை விரிவுபடுத்த திட்டமிடலாம்.
வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மகம் நட்சத்திரத்தில் பிறந்தவரா உங்கள் வாழ்க்கைத்துணை: அதிர்ஷ்டக்காரர் நீங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News