புதனின் அருளால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம்

Mercury Transit: தனுசு ராசியில் புதன் நுழைவதால் பத்ர ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2022, 06:21 PM IST
  • தனுசு ராசியில் புதன் நுழைவதால் பத்ர ராஜ யோகம் உருவாகி வருகிறது.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் இந்த ராஜயோகம் அமையப் போகிறது.
புதனின் அருளால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம் title=

புதன் பெயர்ச்சி 2022: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. டிசம்பரில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றப்போகின்றன. டிசம்பர் 3 ஆம் தேதி புதன் கிரகம் தனுசு ராசியில் கோச்சாரம் ஆகவுள்ளது. புதன் கிரகம் வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தை அளிக்கும் கிரகமான புதன் டிசம்பர் 3 ஆம் தேதி தனுசு ராசியில் மாறவுள்ளது. 

தனுசு ராசியில் புதன் நுழைவதால் பத்ர ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்

ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியில் புதனின் சஞ்சாரம்  பத்ரராஜயோகத்தை உருவாக்கும். இது மிதுன ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அள்ளித்தரும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் ஸ்தானமாக கருதப்படுகிறது. 

இந்த நேரத்தில் கூட்டாண்மையில் செய்யப்படும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மேலும், இந்த நேரம் காதல் விவகாரங்களுக்கும் நல்லது. காதலன் / காதலி, வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான  நேரத்தை செலவிடுவீர்கள். இந்த நேரம் திருமணமானவர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும், பல நல்ல பலன்களை அளிக்கும். 

ரிஷபம்

தனுசு ராசியில் புதன் நுழைவதால் பத்ர ராஜ யோகம் உருவாகி வருகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் இந்த ராஜயோகம் அமையப் போகிறது. இந்த இடம் வயது மற்றும் மறைமுக நோய்களுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | 2023-ன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: ஆண்டு முழுதும் அமோக யோகம், வெற்றிகள் குவியும் 

இந்த நேரத்தில் உங்களை வாட்டி வந்த நாள்பட்ட நோயிலிருந்தும் விடுபடுவீர்கள். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். சொத்து வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். இது மட்டுமின்றி இந்த நேரத்தில் வியாபாரத்தையும் விரிவுபடுத்தலாம்.

மீனம்

ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு பத்ரராஜயோகம் பலன் தரும். புதன் கிரகம் இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறது. இது வேலை மற்றும் பணியிடத்திற்கான ஸ்தானமாகவும் கருதப்படுகிறது. புதிய வேலை தெடும் மீன ராசிக்காரர்களுக்கு புதிய வேலைக்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரம் வணிகர்களுக்கும் நல்லது. 

தற்போது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். முதலீட்டுக்கு ஏற்ற நேரமாகவும் இது இருக்கும். இந்த நேரத்தில் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023ல் சனி தரும் மகாபுருஷ ராஜயோகம், இந்த ராசிகளின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News