வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது? சொர்க்கமும் நரகமும் பணத்தில்! கருடபுராணம் அறிவுரை!

Lord Vishnu On Money Spending: அனைவரும் படிக்க வேண்டிய கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் இருக்கின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2024, 08:56 PM IST
  • பணம் சம்பாதிப்பது எப்படி?
  • கடவுள் மகாவிஷ்ணுவின் அறிவுரை...
  • பணம் செலவு செய்வது எப்படி
வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது? சொர்க்கமும் நரகமும் பணத்தில்! கருடபுராணம் அறிவுரை! title=

கருட புராணம் என்பது இந்து இலக்கியங்களில் முக்கியமானது. விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு என்று நினைத்துவிட வேண்டாம். நாராயணன், கருடனுக்கு உபதேசம் செய்தார். மகாவிஷ்ணு சொல்ல கருடன் கேட்ட புராணம் என்பதால், ’கருட புராணம்’ என்ற பெயர் இந்த புராணத்திற்கு வந்தது. 

இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமான வைணவ புராணத்தில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி கருட புராணத்தின் இரண்டாம் பகுதி விளக்குகிறது.

பொதுவாக, கருட புராணத்தை வீடுகளில் வாசிப்பதில்லை. துக்கம் நடைபெற்ற வீட்டில் கருட புராணத்தை வாசிப்பதும், அதனைக் கேட்பதும் இறந்தவர்கள் சொர்க்கம் செல்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

அனைவரும் படிக்க வேண்டிய புராணம் இது என்றால் அதற்கான காரணம் என்ன? கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன.

மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காக மகாவிஷ்ணுவால் சொல்லப்பட்டு கருடனால் கேட்கப்பட்ட இந்த புராணத்தில் பணம் சம்பாதிப்பது, பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் அதிர்ஷ்டம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா? 

மேலும் படிக்க | எல்லா திசைகளில் இருந்தும் பணம் மழையாய் பொழிய வந்துவிட்டது உபயாச்சாரி ராஜயோகம்! 

கருடபுராணத்தில் பணம்

கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றினால், ஒருவர் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவது மட்டுமல்லாமல், உயிருடன் இருக்கும்போது சொர்க்கத்தில் வாழ்வது போன்ற மகிழ்ச்சியை அடைய முடியும். பணம் சம்பாதிப்பது முதல் அதை எப்படி பயன்படுத்துவது என்பது வரை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

பணம் சம்பாதித்து மட்டுமல்ல, தார்மீக முறைகளில் பணத்தையும் செல்வத்தையும் பயன்படுத்தினால், எப்போதும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழலாம். அதுமட்டுமல்ல, பணத்தை தார்மீக முறைகளின்படி பயன்படுத்துபவர்கள், மரணத்திற்கு பிறகும் புண்ணியத்தின் பலன்களைப் பெறுவார். 

ஏழையாக இருந்தாலும், பணக்காரர் ஆவதற்கு நியாயமும் நேர்மையும் அவசியம் என்றும், பணம் சம்பாதித்து அதை தவறாகப் பயன்படுத்துபவன் கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் ஏழையாகிவிடுவான் என்று கருட புராணத்தில் கடவுள் நாராயணன் கூறுகிறார்.

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!
 
பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது
 கருட புராணத்தின் படி, ஒரு நபர் எப்போதும் நியாயமான முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும். அதாவது நெறிமுறையற்ற வேலை செய்தும், பொய், திருட்டு, ஏமாற்றுதல் போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கக் கூடாது. செல்வத்தை செலவு செய்யும் போதும், நேர்மையான வழியில் பயன்படுத்த வேண்டும். சூதாட்டம், போதைப்பொருள் போன்ற தவறான செயல்களில் பணத்தை வீணாக்கக் கூடாது. பணத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.

குடும்பத்தின் மகிழ்ச்சி
குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக பணம் சம்பாதிக்க வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு வழங்கவில்லை என்றாலோ, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலலோ சம்பாதிக்கும் பணத்திற்கு அர்த்தமே இல்லை. குடும்பத்தின் உணவு, தங்குமிடம், கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவிடுங்கள்.

தொண்டு
பணத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கோ, சமயப் பணிகளிலோ பயன்படுத்தாதவர், எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவர் பணக்காரரே அல்ல. அவரிடம் இருக்கும் பணம் அவருக்கோ சமுதாயத்திற்கோ அல்லது தேவையுள்ளவர்களுக்கோ போய் சேரவில்லை என்றால், அந்த பணத்தால் என்ன பயன்? தொண்டு செய்வதில் வாழ்க்கையில் சுகமும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பது கருட புராணம் சொல்லும் நீதியாகும்.

மேலும் படிக்க | Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News