சக்திவேல் தந்த சக்தி! சக்தி வாய்ந்த வேலால் பகையை வேரோடு வேரறுக்கும் முருகன் வழிபாடு!

Tuesday Worship Sakthi & Son Of Sakthi: 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ செய்யும் முருகப் பெருமானுக்கும், மகனுக்கு சக்திவேலைத் தந்த அன்னை சக்தியையும் ஆவணி செவ்வாயில் வழிபட்டால் துன்பங்கள் தொலைந்தோடும்... ஆவணி செவ்வாய் சக்தி வழிபாடு...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2024, 06:52 PM IST
  • வேல் வாங்கி சூரரை சம்ஹரித்த முருகன்
  • செவ்வாயில் சக்திவேலை வணங்கினால் நலம் பெறலாம்
  • சக்திதேவி மற்றும் சக்தி மைந்தன் வழிபாடு
சக்திவேல் தந்த சக்தி! சக்தி வாய்ந்த வேலால் பகையை வேரோடு வேரறுக்கும் முருகன் வழிபாடு! title=

செவ்வாய் கிழமையில் வழிபாடு: இந்திய பாரம்பரியப்படி செவ்வாய்க்கிழமை நாளில் இறைவழிபாடு முக்கியமானது. செவ்வாய் பகவானுக்கு உரிய நாளான செவ்வாயில், செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆவணி மாத செவ்வாய் வழிபாட்டில் அம்பாளுக்கும், முருகனுக்கும் முக்கியத்துவம் உண்டு.

செவ்வாய்க்கிழமை நாட்களில் முருகனையும், அம்பாளையும் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால் துன்பம் நீங்கி மங்கலங்கள் பொங்கும். செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெறலாம். இதனால்,  திருமணப் பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை நாட்களில் பெண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசி குளித்து விரதம் இருந்து இறைவழிபாடு நடத்துவது சம்பிரதாயமானதாக இருந்தது. இன்று காலம் மாறினாலும், பழக்கங்கள் வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், விரதம் அனுஷ்டித்து அம்மனையும், முருகனையும் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். 

மேலும் படிக்க | முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? ஆடி கிருத்திகையில் பக்தனுக்கு அருள் புரியும் முருகர்!

ராகு கால வழிபாடு

செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்பிகையை பூஜிப்பது நல்லது. அதிலும், பெண்கள், ராகு துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால், தாலி பாக்கியம் கிடைக்கும், திருமணமானவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். 

ஆடி செவ்வாய் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நல்லது ஆவணி மாத செவ்வாயும் என்று சொல்லலாம். செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் செய்வதைவிட இரட்டிப்பு பலன் கொடுக்கும். செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவது கிரக தோஷங்களை போக்கி நல்வாழ்க்கையைக் கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமையில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபட்டுவருவது, தோஷ நிவர்த்தியாகும்.  செவ்வாய் தோஷமோ அங்காரக தோஷமோ இருந்தால் செவ்வாயில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.  அதேபோல, செவ்வாய் திசை நடந்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் செவ்வாய்க்கிழமை நாட்களில் விரதம் இருந்தால், செவ்வாயின் தாக்கம் குறையும்.

மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...

எதிரிகள் இருந்தால் அதை சம்ஹாரம் செய்ய முருகனின் வழிபாடு உதவும். பகைவரை எளிதில் அழித்து வெற்றியைப் பெற சக்திவேல் கொண்ட முருகனுக்கு நொடிப்பொழுது வேலையாகும். சிவசக்தியரின் அம்சமாக தோன்றிய வேலை, சக்தி அன்னை, தனது மகனுக்கு சக்திவேலாக அளித்தார். அன்னையின் சக்திவேலை வாங்கிய முருகன், சிவசக்தி அம்சமான வேலால் பகைவர்களை, அசுரர்களை அழிக்கும் ஐதீகம் இன்றும் ஆண்டுதோறும் கந்தசஷ்டியில் விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இன்றும் ஆண்டுதோறும் நடைபெறும் வேல் வாங்கும் சம்பிரதாய சடங்குகளின்போது முருகனுக்கு வியர்வை துளிர்க்கும். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள். கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாள் சிக்கலில் பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது, தாயிடம் இருந்து வேல் வாங்கும் முருகனுக்கு சக்தி கைக்கு வரும்போது ஏற்படும் மாற்றங்களை இன்றும் பக்தர்கள் நேரடியாக தரிசிக்கின்றனர் என்பது ஆச்சரியமான ஆனால் உண்மையான விஷயமாகும்.

மேலும் படிக்க | மனித சதையை உண்ணும் அகோரிகள்! நரமாமிசம் சாப்பிடும் அகோரிகளின் வாழ்க்கைமுறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News