ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அட்டகாசமான அதிர்ஷ்டம்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2024, 01:26 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும்.
  • இந்த காலத்தில் பண வரவு அமோகமாக இருக்கும்.
  • வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அட்டகாசமான அதிர்ஷ்டம் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகப் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனுக்கு தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் உலக இன்பம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பண வரவு, அழகு, அன்பு ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார். சுக்கிரன் சுமார் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.

சுக்கிரன் பெயர்ச்சி பெரும்பாலும் வாழ்க்கையில் ஆனந்தம், மகிழ்ச்சி, அன்பான திருமண வாழ்க்கை, குழந்தைகளின் நல்வாழ்வு, புகழ், பண வரவு ஆகியவற்றை கொண்டு வரும். ஆனால் சுக்ரனின் அசுப விளைவுகள் பண விரயம், சுகாதாரக் கேடு, அச்சம் ஆகிய அசுப விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். ஜூலை மாதம் சுக்கிரனின் ராசி மாற்றம் இருக்கும். சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி ஆவார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணபலம் அதிகரிக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடகம் (Cancer)

சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சுக்கிரன் கடகத்தில் தான் பெயர்ச்சியாக உள்ளார். ஆகையால் கடக ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். பண வரவுக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகம் ஆவதால் பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். உங்கள் ஆளுமை மேம்படும். பண வரவு அதிகமாகும். வியாபாரம் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சமூகத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் பண வரவு அமோகமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலை மேம்படும்.நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். உங்கள் பேச்சாற்றலால் வெற்றிகளை காண்பீர்கள். மக்கள் உங்கள் பேச்சால் ஈர்க்கப்படுவார்கள். பணியிடத்தில் பாராட்டும் நன்மதிப்பும் கிடைக்கும். அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்கு உரியது? ஜோதிடத்தின் அடிப்படை தெரிந்துக் கொள்வோம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News