பொங்கல் முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Sun Transit 2023 Effect: ஜனவரி 14, 2023 அன்று, மகர ராசியில் சூரியனின் ராசி மாற்றம், 4 ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களை தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 8, 2023, 03:54 PM IST
  • ஜனவரி மாதம் நிகழவுள்ள சூரிய பெயர்ச்சி.
  • அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
  • இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அதிக மகிழ்ச்சி.
பொங்கல் முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்  title=

ஜோதிடத்தில் சூரியன் மிகவும் முக்கியமான கிரகமாகும். நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் நாள் தான் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 14 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது சூரியன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். சூரியன் மகர ராசிக்கு செல்லும் போது தான், தமிழ் மாதமான தை மாதம் பிறக்கிறது. அதேபோல் சனி ஏற்கனவே மகர ராசியில் இருப்பதால், ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு சூரியன் சனி சேர்க்கை அரங்கேறும். இந்த கூட்டணி நான்கு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கும். எனவே சூரியனின் சஞ்சாரத்தால் எந்தெந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த மக்களின் விதி சூரியனைப் போல பிரகாசிக்கும் 

ரிஷப ராசி: சூரியனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மூடிய அதிர்ஷ்டத்தைத் திறக்க உதவும். சொந்தக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பெரிய பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு பெறுபவீர்கள். தைரியத்தாலும், துணிச்சலாலும் சாதனைகளைப் புரிவீர்கள். எடுக்கும் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வரரின் கிரகப் பெயர்ச்சி! உஷாராகும் 4 ராசிகள்

மிதுன ராசி: சூரியனின் ராசி மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பணத்தட்டுப்பாடு நீங்கும். தொழிலில் இருந்த மன அழுத்தம் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சதிக்கு ஆளாக வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி நல்ல காலத்தை தரும். மரியாதை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் பெறலாம். சுற்றுலா செல்லலாம். திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தின் பார்வையில் இந்த சூரியப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இக்காலத்தில் அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகர ராசி: சூரியன் ராசியை மாற்றி மகர ராசியில் பெயர்ச்சியாகப் போவதால், மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உண்மையில் சூரியன் மகர ராசியில் சனியுடன் கூட்டணி வைப்பார். இதனால் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பொருளாதார பக்கம் சிறப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் அனுபவித்த உடல் மற்றும் மன வலிகளில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News