சனிப்பெயர்ச்சி 2023: மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார் அவர். அவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் இருந்து பின்னர் ராசி மாறுகிறார். தற்போது ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு பிரவேசித்துள்ளார். இந்தப் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நல்ல காலமும் சில ராசிகளுக்கு பாதகமான நேரமும் துவங்கியுள்ளது.
சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மீன ராசிக்காரர்களுக்கு இக்கட்டான காலம் தொடங்கியுள்ளது. அவர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கிவிட்டது. இதனால், மீன ராசிக்காரர்கள் தொழில்-வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மேலும் குடும்ப விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். சனிப்பெய்ரச்சியால் மீன ராசிக்கு வரக்கூடும் பாதிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கல்வியாளர்கள்
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனியின் பெயர்ச்சி காரணமாக கல்வி அல்லது நீதிமன்றத்துடன் தொடர்புடைய மீன ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்னால் பல சவால்கள் வரலாம். அவற்றை புரிந்துணர்வுடனும் நிதானத்துடனும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அமைதியாக இருந்து ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள்.
குடும்ப உறவுகளில் இன்னல்
மீன ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பல வித வாக்குவாதங்களும், முரண்பாடுகளும் வர வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக, நீங்கள் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இதன் காரணமாக உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நினைவு உங்களை வாட்டி வதைக்கலாம். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் சொத்துப் பிரச்னையும் வரலாம்.
மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!
ஆரோக்கியம் குறையலாம்
இது ஏழரை நாட்டு சனியின் ஆரம்பம் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் பின்னடைவு ஏற்படலாம். மூட்டுகளில் திடீர் காயம் அல்லது மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கண்பார்வை குறையலாம். சில பெரிய நோய்களுக்கும் ஆளாக நேரிடலாம். எனினும், உடல் நலனில் சரியான அக்கறை செலுத்தினால், இவற்றை கண்டிப்பாக தவிர்க்கலாம்.
வேலை-வியாபாரத்தில் நஷ்டம்
வேலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரம் அவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சில சமயங்களில் ஆதாயமும், சில சமயங்களில் நஷ்டமும் வரலாம். எந்தவொரு தொழிலிலும் முதலீடு செய்வதற்கு முன், அதன் லாப நஷ்ட கணக்கீடுகளை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள்.
சனி பகவானுக்கான இந்த பரிகாரங்களை தொடங்குங்கள்
சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மீன ராசியில் ஏழரை சனி ஆரம்பித்து விட்டது. இதை யாராலும் மாற்ற முடியாது. அதற்கான பலன்களை அனுபவித்தாக வேண்டும். ஆனால், சனி பகவானுக்கான சில பரிகாரங்களை செய்து இந்த தீய பலன்களின் வீரியத்தை கண்டிப்பாக குறைக்க முடியும். ஏழரை சனியின் பக்க விளைவுகளையும் கண்டிப்பாக குறைக்க முடியும்.
- ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி கோவிலுக்குச் சென்று அவரை வழிபடத் தொடங்குங்கள்.
- மிருகங்களுக்கு உணவளிக்கவும்.
- ஏழை எளியவர்களுக்கு உங்களால் ஆனவற்றை தானமாக அளிக்கவும்.
- சனி சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை கண்டிப்பாக சொல்லுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ