குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

இந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி குரு பூர்ணிமா. இந்து மதத்தில் இந்த பவுர்ணமிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குரு பூர்ணிமா நாளில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நடக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2022, 08:26 PM IST
  • பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
  • கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும்.
  • குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம் title=

இந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி குரு பூர்ணிமா. இந்து மதத்தில் குரு பூர்ணிமாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குரு பூர்ணிமா நாளில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நடக்கிறது. ஜோதிடத்தில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கைகள் காரணமாக . சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும்.

ஜூலை 13-ம் தேதி புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போவது நிச்சயம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மிதுன ராசி : 

மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். பணத்தை சேமித்த்து வைப்பீர்கள். அதனால் நல்ல வருமானமும் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வேலையில் பணியில் வெற்றி பெறலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பணமும் லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி பரிவர்த்தனையில் லாபம் உண்டாகும். அன்னை மகாலட்சுமியின் அருள் பூரணமாக கிடைக்கும்.

விருச்சிக ராசி:

உங்கள் கெட்ட நேரம் முடிவுக்கு வந்தது என நினைத்துக் கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரம். திடீர் பண ஆதாயம் கூடும். நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், எதிர்பாராத வகையில் பண வரவு பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பேச்சில் இனிமை இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு பெரும் வரப்பிரசாதம் ஆக இருக்கும். அன்னை லட்சுமியின் அருளைப் பெற, தினமும் காலை மற்றும் மாலையில் அவளை வணங்குங்கள். 

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

தனுசு ராசி: 

 இந்த கால கட்டத்தில் உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். இந்த காலகட்டத்தில் முதலீடுகள் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் ஆகிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. புதனின் சஞ்சாரம் மாணவர்களுக்கு சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
உங்கள் காதலனுடன் வாழ்க்கையை கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பெறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News