குரு வக்ர நிவர்த்தி... 2024 ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான தொடக்கமாய் இருக்கும்!

2024 ஆம் ஆண்டில் குரு பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறக்கூடிய 3 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில ராசிகள் செல்வம், பெருமை, செழிப்பு மற்றும் அனைத்து பொருள் வசதிகளையும் அடையலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 5, 2023, 08:05 PM IST
  • மேஷத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குரு.
  • அனைத்து பொருள் இன்பங்களையும் பெறலாம்.
  • மொத்தத்தில் 2024 தொடக்கம் அட்டகாசமானதாக இருக்கும்.
குரு வக்ர நிவர்த்தி... 2024 ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான தொடக்கமாய் இருக்கும்! title=

மேஷத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குரு: 2024 ஆம் ஆண்டு தொடங்கும் முன், பல கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றப்போகின்றன. தேவர்களின் குருவான குரு பகவானின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 31 அன்று,  வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் பாதிப்பு அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் 2024 ஆம் ஆண்டில் குரு பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறக்கூடிய 3 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில ராசிகள் செல்வம், பெருமை, செழிப்பு மற்றும் அனைத்து பொருள் வசதிகளையும் அடையலாம்.  இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என தெரிந்து கொள்வோம்...

மேஷ ராசி

2024 ஆம் ஆண்டில் குரு பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள். ஏனெனில் குரி பகவான் உங்கள் ராசியிலிருந்து லக்னத்தை நோக்கி நகரும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் மரியாதை மற்றும் கௌரவம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் கூடும். மேலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறலாம்.  குரு பாகவான் உங்கள் ராசியில் இருந்து 12 ஆம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தின் அதிபதியாகும். எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையிலும் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலையை மாற்ற நினைக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி... நவம்பர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு கொண்டாட்டம்!

சிம்ம ராசி

குருவின் வக்ர நிவர்த்தியினால், 2024-ல் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறலாம். ஏனெனில் வியாழன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து அதிஷ்ட ஸ்தானத்தை நோக்கி நகரப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கலாம். அதே நேரத்தில், நீங்கள் எந்தவிதமான ஆன்மீக அல்லது சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். நீங்கள் நிதி நன்மைகளையும் பெற வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், உங்களுக்கு வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். இந்த நேரத்தில் நீங்கள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். குரு உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். மேலும், ஆராய்ச்சித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி

குருவின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஏனெனில் குரு உங்கள் ராசிக்கு அதிபதி. மேலும், குரு உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் நேரடியாக இருக்கப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தை வாழ்க்கையில் முன்னேறலாம். மேலும், உங்களுக்கு காதல் இருந்தால் அது உங்கள் திருமணமாக மாறலாம். இக்காலகட்டத்தில் நிலம், வாகனம், குடும்ப சுகம் கிடைக்கும். மேலும், குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டிற்கு அதிபதி. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அனைத்து பொருள் இன்பங்களையும் பெறலாம். மேலும் நீங்கள் எந்த ஆடம்பர பொருட்களையும் வாங்கலாம். மொத்தத்தில் 2024 தொடக்கம் அட்டகாசமானதாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News