தாய் அல்லது மனைவி படத்தை உங்கள் பர்ஸில் வைத்துள்ளீர்களா? இந்த விஷயத்தில் ஜாக்கிரதை!

Mother or Wife: மனைவி மற்றும் தாய் ஆகிய இருவரில் யாருடைய புகைப்படத்தை பர்ஸில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.    

Written by - RK Spark | Last Updated : Mar 12, 2024, 02:15 PM IST
  • பர்ஸில் வைக்கும் படத்தால் செல்வம் பெருகும்.
  • வாஸ்து சாஸ்திரத்தில் இது குறித்து கூறப்பட்டுள்ளது.
  • சுக்கிரன் வீட்டில் செல்வதை கொண்டு வருகிறார்.
தாய் அல்லது மனைவி படத்தை உங்கள் பர்ஸில் வைத்துள்ளீர்களா? இந்த விஷயத்தில் ஜாக்கிரதை! title=

Mother or Wife: பெரும்பாலும் நாம் நமக்கு அன்புக்குரியவர்கள் அல்லது பிடித்தவர்களின் புகைப்படங்களை பர்ஸில் அல்லது பேக்கில் வைத்திருப்போம். ஆண்கள் பெரும்பாலும் அவர்களது மனைவி அல்லது பெற்றோரின் புகைப்படத்தை பர்ஸில் வைத்திருப்பார்கள். இது ஒரு சாதாரண விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் பர்ஸில் வைக்கும் ஒரு புகைப்படம் கூட உங்களை பணக்காரராக மாற்றும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆண்கள் தங்களது பர்ஸில் தாய் அல்லது மனைவி என யாருடைய புகைப்படத்தை வைத்தால் நன்மை கிடைக்கும் மற்றும் செல்வம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குடிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இன்னும் 50 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்

உங்கள் மனைவி உங்கள் செல்வத்தையும் ஆடம்பரத்தையும் அதிகரிப்பார். வாஸ்து சாஸ்திரத்தின் படி, யாருடைய புகைப்படத்தை உங்கள் பர்ஸில் வைத்திருப்பதும், யாருடைய புகைப்படத்தையும் உங்கள் பர்ஸில் வைக்காமல் இருப்பதும் உங்களது விருப்பம். ஆனால் ஜோதிடத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்றால், உங்கள் மனைவி தான் உங்களின் சுக்கிரன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, உங்கள் மனைவியின் புகைப்படத்தை உங்கள் பர்ஸில் வைத்து இருந்தால் உங்களின் செல்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  சுக்கிரன் செல்வச் செழிப்புக்கு அதிபதி. எனவே மனைவியின் வருகை உங்கள் வாழ்வில் செழுமையை அதிகரிக்கும். 

சுக்கிரன் வாழ்க்கையில் மகத்துவத்தைத் தருகிறார். சுக்கிரனின் பலத்தால், செலவுகளும் அதிகரிக்கும். நீங்கள் புதிய வீடு அல்லது கார் வாங்கலாம். நீங்கள் சுக்கிரனை மேம்படுத்த விரும்பினால், உங்கள் மனைவியின் படத்தை வைத்திருக்க வேண்டும். உங்கள் ஆடம்பரத்தை அதிகரிக்க விரும்பினால், சுக்கிரன் வலுவாக இருப்பது அவசியம்.  மனைவி செல்வத்தை கொண்டு வரும் வேலையில் தாய் வாழ்வில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவார். மறுபுறம், குரு தாயுடன் தொடர்புடையது. அதாவது, உங்கள் தாயின் படத்தை உங்கள் பர்ஸில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் குரு தத்துவத்தை மேம்படுத்தலாம். குரு என்றால் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை வழங்கும் வியாழன் என்று பொருள். 

குருவின் தாக்கத்தால் பணம் வரும் போது அது செலவாகமால் உங்கள் பர்ஸில் தங்கிவிடும். எனவே இதிலிருந்து உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, உங்களுக்கு நிலைத்தன்மை வேண்டுமா அல்லது ஆடம்பரம் வேண்டுமா என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில், உங்கள் பர்ஸில் யாருடைய புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். மனைவி சுக்கிரனுக்கும், தாய் வியாழனுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. இங்கே மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் ஜாதகத்தில் சந்திரன் தாயாரின் அடையாளமாக இருந்தால், உங்கள் பர்ஸில் உங்கள் தாயின் புகைப்படத்தை வைக்க வேண்டாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஏனெனில் அது உங்கள் வாழ்வில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி... பங்குனியில் பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News