தீபங்களின் ஒளியில் நெஞ்சங்கள் மகிழும் நாள் தீபாவளி!! இருளை போக்கி ஒளியை அளிக்கும் தீபாவளித் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் மனதில் இருக்கும் ஆணவம், கர்வம், கோபம், பொறாமை என அனைத்து விதமான தீய குணங்களையும் இருளாக நினைத்து இந்த நாளில் அவற்றை அழிக்க நல்ல குணங்களை தீபமாய் ஏற்றுகிறோம். தீபாவளி நாள் அனக்வருக்கும் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை அள்ளித் தரும் நாளாக கருதப்படுகின்றது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இது இந்துக்களின் பண்டிகையாக இருந்தாலும், நாளடைவில், மதம், இனம், மொழி, நாடு என்ற பேதங்கள் இன்றி இந்த நாள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
புத்தாடை, பட்டாசு, இனிப்புகள், பலகாரங்கள் என இந்த நாளில் நமக்காக காத்திருக்கும் மகிழ்ச்சிகள் ஏராளம். பெரியவர்களின் ஆசி பெற்று, சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த நாளை நாம் ஆனந்தமாக கொண்டாடுகிறோம்.
தென் இந்தியாவில், நரகாசுரன் மீது கண்ணன் பெற்ற வெற்றியை தீபாவளியாக கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் ராவணனை வதம் செய்துவிட்டு ராமர் அயோதிக்கு திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தீபாவளி சமயத்தில் கேதார கௌரி விரதம் இருப்பது வழக்கம். இந்தியா முழுவதும் தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சமீக ஆண்டுகளில் பிரபலமாகி வருகிறது.
மேலும் படிக்க | நலிந்தோருக்கு உதவும் உணர்வு வளரட்டும் - குடியரசுத் தலைவரின் தீபாவளி வாழ்த்து
லட்சுமி குபேர பூஜை:
தீபாவளி அன்று செய்யும் லட்சுமி குபேரன் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி குபேர எந்திரத்தைப் பெற்றார். ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில், மாலை நேரத்தில் மகாலட்சுமியை பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என சிவபெருமான் குபேரனுக்கு கூறிய அறிவுரையின் பேரில் குபேரன் லட்சுமியை வணங்கி செல்வங்களை பெற்றார். அந்த நாள்தான் தீபாவளித் திருநாளாக கொண்டாடப்படுகின்றது.
ஆகையால் இந்த நாளில், நாமும் செல்வத்தின் அட்சய பாத்திரமாக விளங்கும் குபேரரையும், அந்த செல்வத்தை அவருக்கு அளித்த மகாலட்சுமியையும் வணங்கி இந்த பூஜையை செய்தால், வீட்டில் செல்வம் பெருகும், கடன்கள் தீரும் என ஐதீகம்.
லட்சுமி குபேர பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும்?
லட்சுமி குபேர பூஜை செய்யும்போது, லட்சுமி குபேரரின் படத்தை எடுத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜைக்கான இடத்தில் வைக்கவும். கலசம் கொண்டு பூஜை செய்பவர்கள், கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதில் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றி மாவிலை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.
பல வகையான மலர்கள், அட்சதை, குங்குமம் கொண்டு லட்சுமி குபேர ஸ்தோத்திரங்கள், மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசுக்தம் ஆகியவற்றை பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின்னர், பாயசம், வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்ட வேண்டும்.
பூஜை செய்ய ஏற்ற நேரம் எது?
இந்த ஆண்டு தீபாவளியன்று மாலையில்தான் அமாவாசை திதி துவங்குகிறது. ஆகையால் ஜோதிட கணக்கீடுகளின்படி, மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.
மேலும் படிக்க | நாளை தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா... நிகழ்வுகள் முதல் பாதுகாப்புவரை முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ