ஷஷ மஹாபுருஷ் யோகம்..இந்த ராசிகளின் தொழில் வியாபாரம் ஓங்கி நிற்கும்

Shani Uday 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 30-ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமித்த சனி, மீண்டும் மார்ச் 5-ம் தேதி கும்ப ராசியில் உதிக்கப் போகிறார். இதன் போது ஷஷ மஹாபுருஷ் மகாயோகம் உருவாகும், இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2023, 03:06 PM IST
  • ஷஷ மஹாபுருஷ் ராஜயோகம் உருவாகும்.
  • கிரகத்தின் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசியில் தென்படும்.
  • மார்ச் 5 ஆம் தேதி சனி கும்பத்தில் உதயம்.
ஷஷ மஹாபுருஷ் யோகம்..இந்த ராசிகளின் தொழில் வியாபாரம் ஓங்கி நிற்கும் title=

கும்பத்தில் சனி உதயம்: கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனம் அவ்வப்போது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. இதன் போது, ​​கிரகத்தின் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசியில் தென்படும். மார்ச் 5 ஆம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதயமாக போகிறார். இதன் போது ஷஷ மஹாபுருஷ் ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் பலன் பல ராசிகளைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் தென்படும் என்றாலும் சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் லாபமும் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் இப்போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சுபமாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கும்ப ராசி: ஜோதிட சாஸ்திரத்தின்படி கும்ப ராசியில் இருக்கும் ஷஷ மஹாபுருஷ் ராஜயோகம் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் எல்லவற்ற நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம். இது மட்டுமின்றி இந்த நேரத்தில் உங்கள் மரியாதை கூடும். அரசியலுடன் தொடர்புடையவர்களும் எந்த பதவியையும் பெறலாம். சனிபகவானின் உயர்வால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அதே சமயம் திருமணமாகாதவர்களின் வாழ்வில் திருமண பேச்சு வார்த்தை நடத்தப்படலாம்.

மேலும் படிக்க | Astro Traits: பணத்தை தண்ணீர் போல செலவு செய்யும் ‘சில’ ராசிகள்!

மேஷ ராசி: சனியின் உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், வணிகர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். அதே சமயம் ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றில் லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி: சனியின் உதயத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் முயற்சி தொடரும். சுற்றுப்பயணங்கள் மற்றும் பயணங்கள், இரும்பு அல்லது வெளிநாடுகளுடன் தொடர்புடையவர்கள் பண பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News