புதனின் கன்னி ராசி பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்! பலன் பெறும் யோகக்கார ராசிகள்!

Mercury Transit 2024 Sep 23 : புதன் பகவான், இன்று தனது சொந்த வீடான கன்னிக்கு பெயர்ச்சியாகிறார். புதன் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல மாறுதல்கள் ஏற்படும்... யோகக்கார ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 23, 2024, 10:06 AM IST
  • புதன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்...
  • கன்னியில் புதன் பெயர்ச்சி
  • சொந்த வீட்டில் ஆட்சியில் அமரும் புதன்
புதனின் கன்னி ராசி பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்! பலன் பெறும் யோகக்கார ராசிகள்!  title=

கிரகங்களில் இளவரசனாக கருதப்படும் புதன், மிதுனம் மற்றும் கன்னியின் அதிபதியாகவும் திகழ்கிறார். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது புதனின் கருணைப்பார்வையும் குறிக்கிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஒருவருக்கு கொடுக்கு புத்திசாலி என்ற பெயரை வாங்கிக் கொடுக்கும் புதன், இன்று (செப்டம்பர் 23, 2024) தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். 

கன்னி என்பது கால புருஷ அட்டவணையில் ஆறாவது ராசியாகும், பெண்பால் கிரகமான புதன், பூமிக்குரிய ராசியான இரட்டை குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. தற்போது கன்னி ராசிக்கு பெயரும் புதன் பொதுவாகவே அனைவருக்கும் நல்லது செய்வார். ஏனென்றால், கன்னி ராசி தான் புதனின் சொந்த ராசியாகவும், அதன் உச்ச ராசியாகவும் இருக்கிறார்.

பொதுவாகவே, 7 கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கோள்களும் ராகு கேது ஆகிய இரண்டு நிழல்கிரகங்களும் இயங்கிக் கொண்டே இருக்கும்போது, ராசி, லக்னம், நட்சத்திரம் என மாறிக் கொண்டே இருக்கின்றன. 

கிரகங்களின் இயக்கத்தின் வேகத்தின் அடிப்படையில் பார்த்தால், சந்திரன் தினக்கோள் என்றும், சூரியன், புதன், சுக்கிரன் ஆகியவை மாதக்கோள்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. செவ்வாய் கிரகம் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். இந்த 5 கிரகங்களின் இயக்கமே, ஒருவரின் வாழ்க்கையில் நல்லது அல்லது செய்யும் கோள்களாக உள்ளன. ஆண்டு கோள்களான ராகு, கேது, குரு, சனி ஆகிய நான்கு கிரகங்களும் மனிதர் வாழ்வில் நல்ல, கெட்ட செயல்களை அவரவர் தசாபுத்தி அடிப்படையிலேயே தரும். 

மேலும் படிக்க | திருப்பதி லட்டு! கோவிலில் தோஷத்தைப் போக்க மகாசாந்தி ஹோமம் வாஸ்து பூஜை பஞ்சகவ்ய ப்ரோக்ஷனை!

தற்போது புதன் பகவான் தன் ஆட்சி வீடான கன்னி ராசிக்கு இடபெயர்ச்சி பெற்று சொந்த வீட்டில் அமர்க்கிறார். வாழ்க்கைக்கு தேவையான புத்திக்கும், வித்தைக்கும் புதன் தான் காரணம், அதேபோல, ஒருவர் வாழ்க்கையில் நல்ல இடத்தை அடைவதற்கு புதன் பகவானின் பங்கு முக்கியமானது. அறிவு, ஞானம், மென்மை, செழிப்பு ஆகியவற்றின் காரகக் கிரகமான புதன் இன்று பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.  

மிதுனம் , கன்னி, தனுசு, மீனம் ராசிகளுக்கு இன்றைய புதன் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். அதுமட்டுமல்ல, கன்னியில் ஏற்கனவே சூரியன் இருப்பதால், அவரும் சேரும் புதன், புதாதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். இதனால் இந்த நான்கு ராசிகளுக்கும் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

புதன் கன்னி ராசிக்கு பெயர்வதால், மிதுன ராசிக்காரர்களின்  வாழ்க்கையில் வசந்தம் வீடும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். இதுவரை பணத்தால் மட்டுமல்ல, மனதாலும் கஷ்டப்பட்டு வந்த நிலை மாறி மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

கன்னி

புதன் தனது சொந்த ராசியான கன்னிக்கு செல்வதால் கன்னி ராசியினரின் மனதில் காதல் பொங்கும். ஆனால், மனதில் உள்ளவற்றை அப்படியே பிறரிடம் பேசினால் வில்லங்கமாகிவிடும். இதைத் தவிர, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, தொழிலிடத்தில் இணக்கமான சூழல், எதிர்பார்த்த வேலைகள் எதிர்பார்த்தபடியே முடிவது என நிம்மதியாக இருக்கும் காலம் இது.

தனுசு

மனதில் உள்ள ஆற்றாமையை யாரிடமாவது சொல்லிவிடுவது நல்லது என்று புலம்பும் அளவு மன அழுத்தத்தில் இருந்த தனுசு ராசிக்காரர்கள், தற்போது அப்பாடா என ஆசுவாசம் அடையலாம். குடும்பத்தின் மீது கவனமும் அக்கறையும் அதிகரிக்கும், மனதில் நினைத்த காரியம் நினைத்ததுபோலவே நடைபெறும். ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் உங்கள் வாழ்கையை புதன் மாற்றிவிடுவார்.

மீனம்

புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற மீன ராசிக்காரர்களுக்கு இது குதூகலமான நேரம் இது. அறிவுசார் செயல்பாடுகளுக்கு பெயர் வாங்கிய இவர்களுக்கு புதனின் பெயர்ச்சி மேலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். செலவுகள் ஆனாலும் அது சுபமான செலவாகவே இருக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | கேதுவும் சூரியனும் கன்னி ராசியில் இணைந்தால் மோசமாக கஷ்டப்படப்போகும் பாவப்பட்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News