ராகுவின் நட்சத்திரத்திற்கு மாறும் சனி: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்

Shani Rashi Parivartan: சனி பகவான் சதய நட்சத்திரத்துக்கு மாறுவது அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிக மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2023, 02:34 PM IST
  • சதய நட்சத்திரம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது.
  • வியாபாரம் செய்பவர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும்.
  • நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.
ராகுவின் நட்சத்திரத்திற்கு மாறும் சனி: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் title=

சனி நட்சத்திர பெயர்ச்சி 2023: ஜோதிட கணக்கீடுகளின் படி, மார்ச் 15 புதன்கிழமை, சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். சனி அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அடுத்த ஏழு மாதங்களுக்கு 6 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பண வரவு இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவானின் அனைத்து மாற்றங்களும் அதிகப்படியான மாற்றங்களைக் கொண்டு வரும்.

சனி பகவான் சதய நட்சத்திரத்துக்கு மாறுவதும் அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிக மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும், அன்னை லட்சுமியின் பரிபூரண ஆசியை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவதால் 6 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.

1. மேஷம்
சதய நட்சத்திரம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியேறும் போது கண்டிப்பாக பெற்றோரின் ஆசிர்வாதத்தைப் பெறுங்கள்.

2. மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் ரீதியாக சுப பலன்களைப் பெறலாம். சனி பகவான் மூலம் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். கடினமாக உழைப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள். புதிய வாய்ப்புகளை புறக்கணிக்காதீர்கள். உங்கள் நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி 2023: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அழிவை உருவாக்கும்

3. சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி, வேலையில் வெற்றி, பதவி உயர்வு ஆகியவற்றை இந்த பெயர்ச்சி அளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது, நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்யும் மாணவர்களுக்கு, இந்த பெயர்ச்சியானது சிறந்த பலனைத் தரும். செல்வச்செழிப்பு அதிகரிக்கும். 

4. துலாம்
ராகுவின் நட்சத்திரத்தில் சனியின் பிரவேசம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் ஏற்றது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணம் சம்பாதிப்பதற்கு குறுக்குவழியில் செல்ல வேண்டாம். 

5. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக இருக்கும். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானத்திலும் உயர்வு இருக்கும். இந்த நேரம் வணிகஸ்தர்களுக்கு நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். மாணவர்களும் உற்சாகமாக இருப்பார்கள். அபரிமிதமான பண பலன்களைப் பெறுவீர்கள்.

6. மகரம்
மகர ராசிக்கு சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது மிகவும் நல்ல பலன்களை தரும். லக்ஷ்மி தேவியின் ஆசிகள் உங்கள் மீது இருக்கும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News