ஜூன் 17 முதல் பொற்காலம் ஆரம்பம்: வக்ர சனி இந்த ராசிகளுக்கு வாரி வழங்குவார்

Shani Vakri: சனி வக்ர பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதனால், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2023, 01:24 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொருளாதார பலன்களைத் தரும்.
  • இந்த நேரத்தில் நீங்கள் பல வழிகளில் இருந்து பணம் பெற வாய்ப்புகள் உள்ளன.
  • மேலும் இந்த காலத்தில், இந்த ராசிகளின் தடைபட்ட வேலைகளும் எளிதாக முடிவடையும்.
ஜூன் 17 முதல் பொற்காலம் ஆரம்பம்: வக்ர சனி இந்த ராசிகளுக்கு வாரி வழங்குவார் title=

சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: கிரகங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், அஸ்தமன மற்றும் உதய நிலைகளும் நமது வாழ்க்கையில் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான்.

சனி பகவான்

அனைத்து கிரகங்களிலும் சனி மிக மெதுவாக நகரும் கிரகமாவார். அவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டு காலம் இருக்கிறார். இதனால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. சனியை பார்த்து அச்சப்படுபவர்களே அதிகம். ஆனால் அது தேவை இல்லை. நீதியின் கடவுளான சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அளிக்கின்றார். நாம் செய்யும் செயல்கள் நல்ல செயல்களாக இருந்தால், அவர் நம்மை மகிழ்ச்சி மழையில் நனையச்செய்வார். 

சனி வக்ர பெயர்ச்சி:

சனி பகவான் ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். அவரது வக்ர பெயர்ச்சி திரிகோண ராஜயோகத்தை உருவாக்கும். சனி வக்ர பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதனால், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த காலம் மகிழ்ச்சிகள் நிறைந்த காலமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அதிகப்படியான நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் செல்வங்களும் சொத்துகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த யோகத்தினால் உருவாகும் பலன்களால் உங்களின் பொருளாதார பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிக பணப் பலன்களைக் காண்பார்கள். 

ரிஷப ராசி

சனி வக்ர பெயர்ச்சியால் கேந்திர திரிகோண ராஜயோகம் அமைவதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நல்ல வேலைகளில் உள்ளவர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளையும் பெறலாம். இப்போது ஊதிய உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கும், உடல் நலம் கெடலாம்

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கப் போகிறது. இந்த காலத்தில் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நீங்கள் அபரிமிதமான வெற்றிகளை காண்பீர்கள். இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனுடன், உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இப்போது உள்ளன.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொருளாதார பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் பல வழிகளில் இருந்து பணம் பெற வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த காலத்தில், இந்த ராசிகளின் தடைபட்ட வேலைகளும் எளிதாக முடிவடையும். உங்களின் வணிக ஒப்பந்தம் ஏதேனும் சிக்கியிருந்தால், அதை இந்த நேரத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அலுவலக பணிகள், வியாபாரம் என அனைத்துக்கும் இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். இதனுடன், நீங்கள் சம்பாதித்த பணத்தையும் இப்போது நல்ல முறையில் சேமிக்க முடியும். இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமயான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | 10 நாட்களில் புதன் பெயர்ச்சி, இந்த 4 ராசிகளுக்கு பண வரவு.. லாபமோ லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News