குருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு

நவ கிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2024, 04:13 PM IST
  • கடக ராசியில் குரு உச்சம் பெற்றுள்ளார்.
  • கடக ராசிக்காரர்களுக்கு குரு சுப பலன்களைத் தருவார்.
  • தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார்.
குருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு title=

ஜோதிடத்தில், குரு பகவானுக்கு சிறப்பு ஊதியம் உணவு. ஏனெனில், குரு பகவான் தேவர்களின் குருவாக கதப்படிக்கிறார். மேலும் குரு ஞானம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறார். குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல செல்வ செழிப்போடு இருப்பார் என்பது நம்பிக்கை. மேலும் அத்தகையவர்களுக்கு திருமணம தடை ஏற்படாது. மேலும், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இது தவிர, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 

இந்நிலையில் குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றமும் அடைவார். அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. எனவே எந்த ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியின் மூலம் சிறப்பான பண பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு சிறப்பாக வருடமாகும். அத்தகைய சூழ்நிலையில் குருவின் நட்சத்திர மாற்றமும் மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கும். இந்த ராசியின் செல்வ வீட்டில் குரு பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு ஏற்படும். மேலும் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் சாதகமான முடிவுகளை பெறலாம். இருப்பினும், பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

மேலும் படிக்க | ஜூலை 16 முதல் ஒரு மாதத்திற்கு சூரிய பெயர்ச்சியால் துக்கமா சுகமா? உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது?

ரிஷபம் (Taurus Zodiac Sign): கடந்த மே 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி அடைந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார். தற்போது குரு கிரகம் ரிஷபம் ராசியின் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி ​​ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும். பண மழை கொட்டும். வெளியில் சிக்கி இருந்த பணத்தை மீட்கலாம். முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். மதப் பயணம் மேற்கொள்ளாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசியில் தற்போது குரு உச்சம் பெற்றுள்ளார். எனவே கடக்க ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். நினைக்காத அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும். கடக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காணலாம். எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு உண்மையாக கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Cancer Zodiac Sign: கடக ராசியின் வெளிவராத ரகசியம்.. விட்டுக்கொடுக்கும் குணமுடன் இருப்பார்களாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News