இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.... வேலை, வியாபாரத்தில் வெற்றி!!

Sukran Peyarchi Palangal: சில ராசிகளில் சுக்கிரன் பெயர்ச்சியால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் அதிக லாபம் காண்பார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2024, 11:18 AM IST
  • தனுசு ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
  • இந்த காலகட்டத்தில், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.
இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.... வேலை, வியாபாரத்தில் வெற்றி!! title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

செல்வம், செழிப்பு, பேச்சாற்றல், உலக இன்பம், திருமண வாழ்க்கை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் இன்னும் சில நாட்களில் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அனைத்து கிரக பெயர்ச்சிகளைப் போலவே மிதுன ராசியில் சுக்கிரனின் சஞ்சாரமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் இதனால் அனைத்து ராசிகளிலும் சாதகமான விளைவுகளே இருக்கும். எனினும் சில ராசிகளில் சுக்கிரன் பெயர்ச்சியால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் அதிக லாபம் காண்பார்கள். அனைத்து பணிகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் உலக இன்பம், மகிழ்ச்சி, செல்வம், புகழ், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். ஜோதிட கணக்கீடுகளின் படி, சுக்கிரன் ஜூன் 12, 2024 புதன்கிழமை மாலை 6:37 மணிக்கு மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஜூலை 7 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். சுக்கிரன் பெயர்ச்சியால் பல வித நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். இக்காலத்தில் சகோதர, சகோதரிகளிடையே அன்பு அதிகரித்து குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். பொருளாதாரத் துறையிலும் லாபத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் சுக்கிரன் அருளால், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். இது நிதி சிக்கல்களை தீர்க்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

மிதுனம் (Gemini)

மிதுன ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், பணி இடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும். நல்ல செயல்பாட்டின் காரணமாக பதவி உயர்வும் ஊதிய உயர்வுன் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இது தவிர, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழுமையும் இருக்கும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான புரிதலும், அன்பும் அதிகரிக்கும். வணிகத் துறையிலும் நிதி ஆதாயம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  )

மேலும் படிக்க | புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News