ஜூன் 17 முதல்...வக்ர சனியால் அற்புதமான நன்மைகளை பெறப்போகும் ராசிகள் இவைதான்... உங்க ராசி என்ன?

Shani Vakri: இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 13, 2023, 10:43 AM IST
  • கன்னி ராசிக்கு இந்த காலகட்டத்தில் நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.
  • எதிரிகளை தோற்கடித்து, நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும்.
ஜூன் 17 முதல்...வக்ர சனியால் அற்புதமான நன்மைகளை பெறப்போகும் ராசிகள் இவைதான்... உங்க ராசி என்ன? title=

கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஒன்பது கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். ஜூன் 17 ஆம் தேதி, சனி பகவான் கும்பத்தில் தனது வக்ர பெயர்ச்சியை துவக்குவார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். 

சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இதன் காரணமாக அனைத்து ராசிகளின் வாழ்விலும் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். பொதுவாக வக்ர நிலையில் கிரகங்கள் சற்று பலவீனமாக இருக்கும். இதனால் கிரக பெயர்ச்சியால் கிடைக்கும் லாபங்களில் தடைகள் உண்டாகும்.

எனினும் சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும்போது சில ராசிக்காரர்களுக்கு அது மிக நல்ல காலமாக இருக்கும். சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். 

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி தொழிலில் அதிக நிறைய நன்மைகளைத் தரும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தால் சனி பகவான் கண்டிப்பாக தனது ஆசிகளை பொழிவார்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு 10ம் வீட்டில் சனியின் வக்ர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வேலை கிடைக்கும். அதுவும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல மற்றும் பெரிய லாபத்தை தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். பூர்வீக தொழில் செய்து வரும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் பொன்னான காலமாக இருக்கும்.

துலா ராசி

துலாம் ராசிக்கு 5வது வீட்டில் சனியின் வக்ர பெயர்ச்சி நடக்கும். ஆகையால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். மறுபுறம், குழந்தை பாக்கியம் வேண்டி தவமிருக்கும் திருமணமான தம்பதிகளுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும். 

மேலும் படிக்க | 4 நாட்களில் இந்த ராசிகளின் வாழ்வில் புயல்..சனியுடன், ராகு-கேதுவும் கஷ்டத்தை தருவார்

உங்கள் புத்திசாலித்தனத்தால் இந்தக் காலத்தில் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் அதிக பணத்தை சேமிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும். வாகனம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசியின் ஆறாம் வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதன் பலனாக இந்த காலகட்டத்தில் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எதிரிகளை தோற்கடித்து, நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய விரும்பினால், அதைத் தொடங்க இதுவே சிறந்த நேரம். அதிஷ்டுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இன்னும் வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு சனியின் அருளால் நல்ல வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பிள்ளைகளிடம் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மேலும் படிக்க | 4 நாட்களில் வக்ரமடையும் சனி, இந்த ராசிகளுக்கு விடியல் காலம், அதிரடி மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News