Astro Alert: மார்ச் மாதத்தில் கிரகம் என்ன சொல்லுது? எச்சரிக்கையா இல்லைன்னா பிரச்சனை

March 2023 Astro Alert: மார்ச் மாதத்தில் சில பெரிய கிரகங்கள் பரபரப்பை ஏற்படுத்தும், இந்த 5 ராசிக்காரர்கள் பணத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2023, 07:01 PM IST
  • பாத்து கொஞ்சம் கவனமா இருங்க!
  • பணப் பிரச்சனை தாங்க முடியாது!
  • எச்சரிக்கை விடும் மார்ச் மாத கிரக நிலை
Astro Alert: மார்ச் மாதத்தில் கிரகம் என்ன சொல்லுது? எச்சரிக்கையா இல்லைன்னா பிரச்சனை title=

Grah Gochar 2023:  மார்ச் மாதத்தில் செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைவார். இதற்குப் பிறகு, வியாழன் மீனத்தில் சஞ்சரிப்பார். மீன ராசிக்கு புதன், வியாழன் பெயர்ச்சியாவதால் புத்தாதித்ய யோகம் உருவாகும். இது மட்டும் சிலருக்கு நன்மைகளைக் கொடுக்கும் என்றால், மார்ச் மாத இறுதியில் புதன் மீண்டும் ராசி மாறி மேஷ ராசிக்கு செல்வார் என்பது சிக்கல் உருவாக்கும் நிலையாக பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு 2022-23 நிதியாண்டில் பணப் பிரச்சனைகள் அதிகரிக்கும். 

மார்ச் மாதத்தில் புதன், சுக்ரன், செவ்வாய், சூரியன் போன்ற முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறும். இந்த கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகம் என்றால் பலருக்கு பாதகமாக இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?  

2023 மார்ச் மாத துரதிருஷ்ட ராசிகள்

சிம்மம் 

சூரியன் மற்றும் செவ்வாயின் பார்வை சிம்மத்தின் மீது இருக்கும். பணத்திற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கிரகங்களின் சஞ்சாரம் உங்களை மனதளவில் மகிழ்ச்சியடையச் செய்யும். திடீரென சில தடைகளும் வரலாம். எட்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் மனநிலை சரியக இல்லாமல் வருத்தங்களால் நிரம்பலாம்.

கன்னி 

மார்ச் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் கன்னி ராசியினருக்கு பணப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வரவேண்டிய பணத்தை பெறுவதற்கே பல தடைகளை சந்திக்க வேண்டி வரும். ஓட்டம் அதிகம் இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் மனவருத்தம் ஏற்படலாம். தொழில் செய்பவர்கள், தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், அலட்சியத்தைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

மேஷம்

மார்ச் மாதம், மேஷ ராசியில் சனியின் அம்சம் மற்றும் ராகு இருப்பதால், மாதம் முழுவதும் பரபரபபக செயல்பட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் கூட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். கோபம் அதிகரிக்கும், அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன்கள் கிடைக்காது. செவ்வாயின் தாக்கத்தால் வேலையில் சிரமங்கள் ஏற்படலாம்.

கும்பம்

கிரகங்களின் சஞ்சாரத்தால் பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்பும் தென்படுகிறது. வேலை செய்யும் பாணியில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். சொத்து விஷயங்களில் மற்றவர்களின் தலையீடு இருக்கும்.

மகரம்

கிரகங்களின் சஞ்சாரத்தால், மகர ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். சகோதரர்களிடையே நல்லுறவு இருக்காது, வீட்டில் பிரச்சனைகள் வரலாம். எனவே கவனமாக செயல்படவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News