கர்நாட்டக முதல்வராக பதவியேற்றார் HD குமாரசாமி!

நாட்டு தலைவர்கள் முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் கர்நாட்டக முதல்வராக பதவியேற்றார் HD குமாரசாமி!

Last Updated : May 23, 2018, 04:41 PM IST
கர்நாட்டக முதல்வராக பதவியேற்றார் HD குமாரசாமி! title=

கர்நாட்டக முதல்வராக HD குமாரசாமி, அமைச்சர்கள் இன்று பதவேற்கின்றனர். இந்த பதவியேற்ப்பு விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துக்கொள்கின்றனர்!

மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22 அமைச்சர் பதவியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 அமைச்சர் பதவியும் என மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிகிறது.


16:39 23-05-2018
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார்!


16:35 23-05-2018
கர்நாட்டக முதல்வராக பதவியேற்றார் HD குமாரசாமி!


6:21 23-05-2018
கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள MLA-க்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி சந்தித்து பேசினர்!


16:10 23-05-2018
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள், கர்நாட்டக முதல்வர் பதவியேற்பு விழாவில் மமதா பேனர்ஜி மற்றும் மாயாவதி அவர்களை சந்தித்தார்!


16:07 23-05-2018
பெங்களூருவை திடீரென தாக்கிய மழையால் பதவியேற்பு விழாவில் தாமதம்!


15:19 23-05-2018
HD குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, CPI(M) மூத்த தலைவர் சீத்தாராம் யச்சூரி ஆகியோர் பெங்களூரு வந்தடைந்தனர்!


#KarnatakaElection

222 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிருப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஆளுநர் விதித்தார். ஆனால் பெருபான்மையை (மே 19) நிருப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் மே 19-ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடப்பதற்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியின் சார்பில் HD குமாரசாமி அவர்களை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குமாரசாமி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22 அமைச்சர் பதவியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 அமைச்சர் பதவியும் என மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து பெங்களூரு விதன்சவுதா பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Trending News