ஸிவா டோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்; வைரலாகும் Video!

MS டோனியின் சுட்டி மகள் ஸிவா டோனியிடம் இந்தி கற்கும் ரிஷப் பண்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Last Updated : May 11, 2019, 10:21 PM IST
ஸிவா டோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்; வைரலாகும் Video! title=

MS டோனியின் சுட்டி மகள் ஸிவா டோனியிடம் இந்தி கற்கும் ரிஷப் பண்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

IPL தொடர் ஒருபக்கம் விருவிருப்பாக சென்றுக்கொண்டிருக்க, கிரிக்கட் வீரர்களின் வாரிசுகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். ஆம் களத்தில் இல்லை தளத்தில்., இணைய தளத்தில் அவ்வப்போது கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்த்து உற்சாக படுத்தி செல்வது கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகளுக்கு வாடிக்கையாகி விட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி எவ்வளவு பிரபலமோ., அதைவிட அதிக அளவு பிரபலமாகி இருப்பவர் அவரது மகள் ஸிவா டோனி. அவரது அசைவு ஒவ்வொன்றினையும் கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ரிஷப் பண்ட்-க்கு அவர் இந்தி கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்தி மொழியில் உள்ள எழுத்துக்களை ஸிவா சொல்ல, அதனை ரிஷப் பண்ட் திரும்ப சொல்கின்றார். இந்த வீடியோவினை தற்போது CSK ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து பிரபலமாக்கி வருகின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Meet Pant's Hindi Teacher - Ziva the Diva!@rishabpant @mahi7781 #Dhoni #MSDhoni #WhistlePodu

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைப்பெற்ற IPL குவாளிப்பையர் 2 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மும்பை அணியுடன் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க., அவர்களது காத்திருப்புக்கு தீனியாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது...

Trending News