42 நொடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த யூடியூபர்..! எப்படி?

யூ டியூபர் ஒருவர் 42 நொடிகளில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பாதித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:40 PM IST
  • 42 நொடிகளில் 1.75 கோடி சம்பாதித்த யூ டியூபர்
  • ஜொனாதன் மா யூ டியூப் சேனல் வீடியோ வைரல்
  • கூகுள், பேஸ்புக்கில் பணியாற்றியுள்ளார்
42 நொடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த யூடியூபர்..! எப்படி? title=

பிரபல யூ டியூபர்

ஜொனாதன் மா என்பவர் பிரபல யூ டியூபர். Joma Tech என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் அவருக்கு சுமார் 16 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பம், கிரிப்டோ தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். யூ டியூப் சேனல் தொடங்குவதற்கு முன்பு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிய அவர், பின்னர் முழு நேர யூடியூபராக மாறினார். அவருக்கு சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.

மேலும் படிக்க | விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!

என்.எப்.டி அறிமுகம்

தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பகிர்ந்து வந்ததால், டெக் உலகில் கிடைக்கும் வருமானம் குறித்த தெளிவு ஜொனாதன் மாவுக்கு இருந்தது. இதனால், தானும் ஒரு என்.எப்டியை அறிமுகப்படுத்தினால் சந்தாதாரர்களிடம் விற்பனை செய்து, வருமானம் ஈட்ட முடியும் என எண்ணினார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. 'Vaxxed Doggos' என்ற என்எப்டியை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டார். ஜொனாதன் மா எதிர்பார்த்ததுபோலவே, அவர் அறிமுகப்படுத்திய என்.எப்டி விற்பனையானது.

மேலும் படிக்க | Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

NFT மூலம் வருவாய்

இதன் மூலம் அவருக்கு 42 நொடிகளில் ரூ.1.75 கோடி ரூபாய் கிடைத்தது. மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும், சந்தை மதிப்பும் அவருக்கு தெரிந்ததால், இவ்வேளவு பெரிய தொகையை அவர் சம்பாதிக்க முடிந்தது. வரிவருவாய் 40 லட்சம் ரூபாய் போக, 1 கோடியே 35 லட்சம் ரூபாய் ஜொனாதன் மாவுக்கு வருமானமாக கிடைத்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News