சாகசம் செய்த இளைஞர்களை கீழே தள்ளிவிட்ட நபர்; பகீர் வீடியோ

வணிக வளாகம் ஒன்றில் சாகசம் செய்த இளைஞர்களை நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 5, 2022, 12:57 PM IST
  • எஸ்க்லேட்டரில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள்
  • திடீரென கோபம் வந்து தள்ளிவிட்ட மர்ம நபர்
  • சாகசம் செய்ய சென்ற இளைஞர்களுக்கு வந்த வினை
சாகசம் செய்த இளைஞர்களை கீழே தள்ளிவிட்ட நபர்; பகீர் வீடியோ title=

டிக்டாக் உள்ளிட்ட ஷார்ட் வீடியோ தளம் மிகவும் பிரபலமடைந்துவிட்டதால் உலகம் முழுவதும் வீட்டுக்கு ஒரு பிரபலம் உருவாகி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்வதுடன், அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். வருமான ஆதாரம் இருப்பதால், பலர் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையைவிட்டுவிட்டு, முழு நேரமாக சமூக ஊடகங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். ஒருவரை பிராங்க் செய்வது முதல் வீட்டில் சமைப்பது துணி துவைப்பது வரை என அன்றாட வாழ்க்கையையே கன்டென்டாக மாற்றி டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டனர் பலர்.

மேலும் படிக்க | தாய் சிங்கத்தையே மிரள வைத்த குட்டி சிங்கம்! க்யூட்டான வீடியோ வைரல்! 

சாகசம் செய்து பலரை கவரும் இளைஞர்களின் வீடியோவும் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. எல்லோராலும் செய்ய முடியாத அல்லது வித்தியாசமாக முயற்சிக்கிறவர்களின் வீடியோவை மக்கள் பார்ப்பதால், அப்படியான கன்டென்டுகளை உருவாக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இளைஞர்கள் இரண்டு பேர் வணிக வளாகம் ஒன்றில் எஸ்கலேட்டரில் ஏறாமல், அதன் வெளியே நின்று மேலே ஏற முயற்சிக்கின்றனர். இதில் அவர்களுக்கு நல்ல அனுபவம் இருப்பது வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது.

வழக்கம்போல் அவர்கள் அந்த எஸ்கலேட்டரின் வெளிப்புறத்தில் மூவாகும் கைப்பிடியை பிடித்துக் கொண்டு மேலே ஏறுகின்றனர். அப்போது, அவர்களுக்கு முன்பாக எஸ்க்லேட்டரில் இருந்த நபர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வெளியில் இருந்து கைப்பிடியை பிடித்துக் கொண்டு ஏறிய இளைஞர்களின் கையை பிடித்து கீழே தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ காண்போருக்கு பகீர் என இருக்கிறது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ 5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

மேலும் படிக்க |  நீ சொன்னதலாம் கேக்க முடியாது! எட்டி உதை விட்ட நாயின் வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News