வச்ச குறி தப்பிடுச்சே பங்கு? ஆர்வக் கோளாறில் தப்பான முதலையின் குறி! இரை போச்சே!

Crocodile Vs Drone Video: புகைப்படம் எடுக்க வந்த ட்ரோனை, பறவை என்று நினைத்து, துள்ளி குதித்து வேட்டையாடும் முதலை வீடியோ... இப்படி ஒரு வீடியோவை  பார்த்திருக்க சான்ஸே இல்ல!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2023, 03:17 PM IST
  • ஆர்வக்கோளாறியில் தப்பான குறி
  • வைச்ச குறி தப்பிடுச்சே பங்கு?
  • முதலையை போட்டோ எடுக்க அனுமதி வாங்கனுமோ?
வச்ச குறி தப்பிடுச்சே பங்கு? ஆர்வக் கோளாறில் தப்பான முதலையின் குறி! இரை போச்சே! title=

வேட்டைக்கார முதலை வீடியோ: அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் தகவல்கள் உதவுகின்றன. செய்திகள், கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பலதரப்பட்ட வழிகளிலும் நம்மை வந்து அடையும் எண்ணற்ற செய்திகள், நமக்கு பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால், பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல, நாம் என்றுமே நேரில் சென்று பார்க்க முடியாத அல்லது பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன.

அந்த வகையில், சமூக ஊடகஙக்ளில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்ட இந்தக் காலத்தில், இணையத்தில் இணைந்து நாம் பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்துகொள்கிறோம்.

இணையம் மூலம் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை கொடுத்தால், அவற்றில் பயனுள்ள பல தகவல்களுடன் சேர்த்து, தேவையில்லாத சங்கடங்களும் வருவதை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க | ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்

இந்த வீடியோக்களில் விலங்குகளின் சுட்டித்தனமும், புத்திசாலித்தனமும் மட்டுமல்ல பயங்கரமாக வேட்டையாடும் வீடியோக்களும் வைரலாகின்ரன. கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தையும் பார்க்க முடிகிறது.  சில வீடியோக்களை பார்த்தால் நமக்கு பீதி ஏற்பட்டால், சில குபீர் என சிரிக்க வைக்கின்றன.

இன்று நாம், விலங்குகளின் மிகவும் நெருக்கமான வீடியோக்களை பார்த்து ரசிக்க முக்கிய காரணம் ட்ரோன்களின் பயன்பாடு. அப்படி ஒரு நீர்நிலையை சுற்றிக் கொண்டிருக்கும், ட்ரோனை அட்டாக் செய்து பல்பு வாங்கிய முதலையின் வீடியோ இது.

பல்பு வாங்கிய முதலை வீடியோ

இந்த குறி தவறிய முதலையின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிறது. குறி பார்த்து, அட்டாக் செய்தாலும், வாய்க்குள் சிக்கியது இரையல்ல, மெஷின் என்று தெரிந்த முதலையின் முகம் மாறியிருக்குமோ? நீங்களே இந்த 

முதலையின் வாய்க்குள் சென்ற ட்ரோனின் கதி என்ன ஆனதோ? தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுற்றும் ட்ரோன்

வைரல் வீடியோ தொடங்கும்போது, முதலை நீருக்குள் இருக்கிறது. ட்ரோன் அந்த நீர்நிலையை சுற்றி வட்டம் இடும்போது, சில நொடிகளில், முதலை தண்ணீரில் இருந்து துள்ளி குதித்து ட்ரோனை கவ்வி விடுகிறது.  

மேலும் படிக்க | தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க

மேலும் படிக்க | உன்னை பிடிக்காம விடமாட்டேன்! கங்கணம் கட்டிக் கொண்டு துரத்தும் பென்குயின்! பல்பு கொடுக்கும் பறவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News