விரைவில் வெளியாகிறது 'பேட்ட'; முடிந்தது படப்பிடிப்பு வேலை!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்ததில் வாயிலாக தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2018, 08:13 PM IST
விரைவில் வெளியாகிறது 'பேட்ட'; முடிந்தது படப்பிடிப்பு வேலை! title=

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்ததில் வாயிலாக தெரிவித்துள்ளார்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டதை விட 15 நாள் முன்னதாகவே முடிவடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதைவிட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளது. படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு உள்பட படக்குழு அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் மகிழ்ச்சியான விஜயதசமி வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்!

Trending News