காத்திருந்து முதலைக்கு ஸ்கெட்ச் போட்ட பாம்பு! சாப்பாட்டு பிரச்சனை ஓவர்! வைரல் வீடியோ

snake crocodile Video: தண்ணீரில் இருந்து வெளியே வந்த முதலையை வேட்டையாடி, லபக்கென்று முழுங்கிய பாம்பு வீடியோ வைரலாகிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 11, 2023, 03:49 PM IST
  • தண்ணீரில் இருந்து வெளியே வந்த முதலை
  • காத்திருந்து வேட்டையாடிய பாம்பு
  • வாழ்வா சாவா வீடியோ வைரல்
காத்திருந்து முதலைக்கு ஸ்கெட்ச் போட்ட பாம்பு! சாப்பாட்டு பிரச்சனை ஓவர்! வைரல் வீடியோ title=

நிம்மதியாக நடந்துக் கொண்டிருக்கும்போது, திடீரென பாம்பு வந்தால் என்னவாகும்? மூச்சு நின்றுவிடும் என்று சொன்னால் அது உண்மை தான். ஏனென்றால், தனது இருப்பிடமான நீரில் இருந்து வெளியே வந்த முதலையை பாம்பு விழுங்கும் வீடியோவை பார்த்தால் மூச்சு நிற்கும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது கைக்குள் உலகை சுருங்கச் செய்துவிட்ட மொபைலுக்குள் நமது உலகமே அடங்கிவிட்டது போல, இந்த பாம்பின் வயிற்றுக்குள் முதலை அடங்கிவிட்டது.  

கொடும் விஷத்தைக் கொண்ட பாம்புகள் கடித்தால், அதிலுள்ள சில துளி விஷத்தால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள். யாருக்குமே, இந்த கொடிய விலங்குகளை பார்த்தால் பயம் வரத்தான் செய்யும்.  பாம்புக்கு பசி வந்தால் பத்தும் பறக்காதா என்ன? காடுகளில், யாருக்கும் 

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று நீரில் இருந்து வெளியே வந்த முதலையை இரையாக்கிய வீடியோ மனதை பிசைகிறது. சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்களில் பல்வேறு விதமான மோதல்களையும், காதல் விளையாட்டுக்களையும் பார்த்திருக்கலாம். 

மேலும் படிக்க | துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பாம்பு! அலறியடித்து ஓடிய மக்கள்! வீடியோ வைரல்

தண்ணீரில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த விலங்கு முதலை, ஆனால் தண்ணீரில் இருந்து வெளியே வந்த முதலையை மலைப்பாம்பு வாயில் அடக்கிய வீடியோவை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

வைரலாகி வரும் வீடியோவில், ஒரு முதலை தனது இரையை தேடுவதற்காக தண்ணீருக்கு அடியில் அங்கும் இங்கும் அலைந்து திரிவதை காணலாம். ஆனால் பின்னர் ஒரு ஆபத்தான மற்றும் ராட்சத மலைப்பாம்பு முன்னே வருவதைப் பார்த்து தனது உயிரைக் காப்பாற்ற ஓடத் தொடங்குகிறாது. ஆனால் மலைப்பாம்பு தனது இரையை கண்டுபிடித்துவிட்ட நிலையில், முதலையை விட்டுவிடாமல், முழுவதுமாக விழுங்குகிறது.

மலைப்பாம்பின் வாய்க்குள் இருந்து முதலை எவ்வாறு தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறது என்பதை வீடியோவில் அது நடத்தும் போராட்டத்தின் மூலம் தெளிவாகக் காணலாம், ஆனால் அது வெற்றிபெறவில்லை. மலைப்பாம்பு, முதலையை சிறிது சிறிதாக தன் வாயிக்குள் கொண்டு சென்று முதலையை முழுவதுமாக விழுங்கி ஏப்பம் விடுகிறது.

மேலும் படிக்க | மிரட்டிய மிக்ஜாம் புயலில் மின்னிய மீட்புக்குழு: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ

வீடியோவை பார்த்த பயனர்கள் மிகவும் திகைத்து போயுள்ளனர்.

வைரலாகும் வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் @hunting.world.ir என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ அதிக லைக் மற்றும் கமெண்ட் மற்றும் லைக்குகளை பெற்று வருகிறது.வீடியோவை பார்த்துவிட்டு ஒரு பயனர் பயத்துடன் செய்த கமெண்ட் என்ன தெரியுமா? இவ்வளவு பெரிய பாம்பு, ஒரு வளர்ந்த மனிதனை முழுமையாக விழுங்கிவிடுமா?  

இதைப் பார்த்த பலரின் மனதில் எழும் கேள்வி என்னவாக இருக்கும்? ‘விளையாட்டுக்கும் அளவு வேணும், இது வாழ்வா சாவா விளையாட்டு இல்ல’ அல்லது ‘நீங்களே நேரில் சென்று முயற்சி செய்யலாமே’ என்பதாக தான் இருக்கும்...

மேலும் படிக்க | பாம்புடன் படுத்து தூங்கும் சிறுமி! எழுந்தவுடன் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News