மண்ணை உயிருடன் வைத்திருங்கள், மண்ணின் பல்லுயிரியலைப் பாதுகாப்போம்
மண்... மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து திரைப்பட பாடல் என்றென்றும் மனதில் நிலைத்து நிற்கிறது.
உண்மையில், மனிதன் மண்ணின் மீதான ஆசையினால் அதை தன் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தியத்தில் இன்று மண் (Soil) தனது உயிர்ப்பை இழந்துவருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய ஆனால் நிதர்சனமான உண்மை.
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் மண்ணையே அடிப்படையாக்க் கொண்டு வாழ்கின்றன. மண்களே தாவரங்களுக்கு உணவளித்து பாதுகாக்கின்றன. உயிரினங்களின் இந்த மாறுபட்ட சமூகம் மண்ணை ஆரோக்கியமாகவும் வளமாகவும் வைத்திருக்கிறது. இந்த பரந்த உலகம் மண்ணின் பல்லுயிரியலை உருவாக்குகிறது மற்றும் பூமியில் வாழ்க்கையை சாத்தியமாக்கும் முக்கிய உயிர் வேதியியல் செயல்முறைகளை தீர்மானிக்கிறது.
அனைத்திற்கும் ஆதியும் அந்தமுமாய் இருக்கும் மண்ணை நாம் சரிவர கையாள்கிறோமா என்றால், இல்லை என்ற பதிலை தலை குனிந்து சொல்ல வேண்டிய அவலத்தில் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
Also Read | England: நீரெலிகள் உருவாக்கிய அற்புதமான அணை @Beavers
உலக மண் தினம் (WSD) ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மண் வளங்களை நிலையாக பாதுகாப்பதும் இந்த தினத்தை அனுசரிப்ப்தான நோக்கம்.
மண்ணைக் கொண்டாடுவதற்கான சர்வதேச நாளை அனுசரிக்கலாம் என சர்வதேச மண் அறிவியல் ஒன்றியம் (IUSS) பரிந்துரைத்தது. அதை பரிசீலித்த, உலகளாவிய மண் கூட்டாட்சியின் அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) உலக மண் தினம் அனுசரிக்க ஒப்புதல் கொடுத்தது. அதன்படி, ஐ.நா பொதுச் சபை (UN) டிசம்பர் ஐந்தாம் நாளை உலக மண் நாள் 2014 டிசம்பர் 4 முதல் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, மண் நிர்வாகத்தின் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொள்வதன் மூலம், உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), "மண்ணை உயிருடன் வைத்திருங்கள், மண்ணின் பல்லுயிரியலைப் பாதுகாப்போம்" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டின் மண் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் மனித நல்வாழ்வைத் தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்களை மண்ணின் ஆரோக்கியத்தை விரைவாக மேம்படுத்துவதில் ஊக்குவிப்பதன் மூலம், இந்த பிரச்சாரம் மண்ணின் பல்லுயிர் இழப்பை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாம் விரைவில் செயல்படவில்லை என்றால், மண்ணின் வளம் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து பாதிக்கப்படும், இது உலகளாவிய உணவு விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பை மிகவும் மோசமாக பாதிக்கும் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ளவேண்டும்.
Also Read | National Pollution Control Day இன்று அனுசரிக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
ஏன் டிசம்பர் 5?
மண் வளத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான தாய்லாந்து மன்னர் பூமிபோல் ஆடுல்யாதேஜ் (H.M. King Bhumibol Adulyadej) அவர்களின் நினைவாக, அவரது பிறந்த நாள் அன்று உலக மண் தினம் (WSD) அனுசரிக்கப்படுகிறது.
எதிர்வரும் தலைமுறையினருக்கு மண்ணின் முக்கியத்துவத்தை அறியச் செய்வது நமது முக்கியக் கடமை ஆகும். நம் நாடு விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு, கிராமங்கள் நிறைந்த நாடு. மண்ணை நாம் பாதுகாத்தால், மண் நம்மை பாதுகாக்கும்...
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR