ராட்சத பாம்பை கட்டிப்பிடித்தபடி வீடியோ வெளியிட்ட பெண்..கடைசியில் என்ன ஆச்சு பாருங்க!

Snake Viral Video: ஒரு பெண், ராட்சத பாம்பு ஒன்றை ஒரு பெண் கட்டிப்பிடித்து கொண்டிருப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 7, 2023, 06:56 PM IST
  • பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கு நடுங்கும்.
  • ஒரு பெண், அசால்டாக பாம்பை கட்டிபிடித்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
  • இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராட்சத பாம்பை கட்டிப்பிடித்தபடி வீடியோ வெளியிட்ட பெண்..கடைசியில் என்ன ஆச்சு பாருங்க! title=

இந்த உலகில் பல வினோதமான நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது. வளர்ந்து வரும் சமூக வலைதளங்களின் மாற்றங்களை பார்க்கும் போது, தினம் தினம் எதுவும் நடக்கவில்லை என்றால்தான் அதிசயமாக உள்ளது. பல கண்டங்களையும் பல்வேறு தரப்பினரையும் நாடுகள் கடந்து ஒன்றிணைத்துள்ளது நம் கையில் உள்ள சிறிய கைப்பேசி. இதன் மூலம் பரவும் பல விஷயங்கள் அவ்வப்போது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். இப்படி வைரலாகும் சில விஷயங்களால் பலர் பயனடைகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் மனதை பாதிக்கும் அல்லது மனதை நெருடும் வகையில் பல வீடியோக்களையோ அல்லது போட்டோக்களையோ பார்க்க நேரிடும். அதில் ஒரு சில வீடியோக்கள், பலரை இரவில் தூங்க விடாமல் கூட செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 

பாம்பை கட்டிப்பிடித்த பெண்..

சாதாரணமாக பாம்பு என்றாலே பலருக்குள்ளும் இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்ளும். காரணம், நொடிப்பொழுதில் ஆளையே சாய்த்து விடும் விஷத்தன்மை உடையவை, பாம்புகள். இவற்றால் பலருக்கும் பல வகைகளில் ஆபத்து நேரலாம். அதனாலேயே, பாம்பை கண்டால் பலர் அடிப்பதில்லை. அவற்றின் வழியில் இருந்து தள்ளியே இருப்பர். 

பாம்பை கண்டு பயப்படுபவர்கள் ஒருபக்கம் இருக்க, அதை செல்லபிராணிகளை போல மடியில் வைத்து கொஞ்சுபவர்கள் சிலரும் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கு அவரவர் விருப்பம் போல சில மிருகங்களை பிடிக்கும். இது போல், ஆளையே கொள்ளும் மிருகங்களையும் சில வினோத மனிதர்களுக்கு பிடித்துள்ளது. இவர்களில் சிலர், அந்த ஆபத்தான மிருகங்களை கையாளும் வேலைகளை பார்க்கின்றனர். இந்த வகையில், ஒரு பெண் பல வண்ணங்களில் இருக்கும் ரெயின்போ பாம்பு எனும் பாம்பை தன் உடலில் சுற்றிக்கொண்டு கட்டிப்பிடித்தார் போல ஒரு வீடியாேவை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | கழுதைப்புலியை கட்டிப்பிடித்த நபர்..! அய்யய்யோ..அடுத்து என்னாச்சு? வைரல் வீடியா!

வைரல் வீடியோ:

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்தான் இந்த வீடியோ தற்போது பரவலமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த பெண், வெளிநாட்டில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் வேலை பார்ப்பவர். 

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், அப்பெண் ரெயின்போ பாம்பை வைத்துக்கொண்டு அது குறித்து வீடியோவில் பேசுகிறார். மேலும், “சூரிய ஒளி பட வேண்டும் என்பதற்காக எனது டார்லிங்கை வெளியில் அழைத்து வந்தேன். இவள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள் இல்லையா? இவளது இந்த அழகு இது போன்று வெயில் அடிக்கும் நாட்களில்தான் பெரிதாக வெளியில் தெரியும்..” என்று குறிப்பிட்டுள்ளார். 

நெட்டிசன்களின் ரியாக்ஷன்..

பலர் பாம்பை கண்டு பயப்படுபவர்களாக இருப்பினும், இது போன்று உயிரியல் பூங்காவில் விலங்குகளை பார்த்துக்கொள்பவரை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்பவர்களும் பாம்பு பிரியர்களாகவே உள்ளனர். அவர்களில் சிலர் இந்த பாம்பின் அழகு குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர், “பாம்புகளால் உண்மையாகவே தனக்கு பிடித்தவர்கள் இவர்கள்தான்” என கண்டு பிடிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | மத்திய பிரதேசத்தில் உள்ள மிதக்கும் அரண்மனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News