இந்தூர்: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண், சமநிலையை இழந்து கீழே விழுந்து, பிளாட்பாரம் மற்றும் ரயிலுக்கு இடையேயிலனா இடைவெளியில் சிக்கிக்கொண்டார். பிளாட்பாரத்தில் நின்றிருந்த மற்ற பயணிகளால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்வம் இந்தூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது மற்றும் அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
"உதய்பூர் நோக்கிச் சென்ற ரயில், செவ்வாய்க்கிழமை இந்தூர் ஸ்டேஷனுக்கு வந்தது. பின்னர் பிளாட்பாரத்தில் இருந்து கிளம்பும் போது, அந்தப் பெண் அவசரமாக ரயிலில் ஏற முயன்றார். ஆனால், அவள் சமநிலையை இழந்து பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிக்கொண்டாள் என மேற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி கெம்ராஜ் மீனா பிடிஐ (PTI) செய்தி ஊடகத்திடம் கூறினார்.
#WATCH | Madhya Pradesh: Fellow passengers saved the life of a woman in Indore who was trying to board a moving train, yesterday.
(Video source: Railway Protection Force, Indore) pic.twitter.com/0HgbYLrnwq
— ANI (@ANI) August 19, 2021
பிளாட்பாரத்தில் இருந்த வேறு சில பயணிகள் உடனடியாக அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றினர் என்றார். அதேநேரத்தில் அரசு ரயில்வே காவல்துறையின் (ஜிஆர்பி) இரண்டு பெண் பணியாளர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர் என்றார்.
ALSO READ | Viral Video: இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்
இந்த சம்பவத்தில் இருந்து பயணிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஓடும் ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் போலிஸ் அதிகாரி மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR